பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/489

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
487

planometer: (எந்.) தளப்பரப்புத் தகடு: தளப்பரப்பு அளக்கப் பயன்படும் வார்ப்பிரும்புத் தகடு

plans and specifications: (பட்.) வரைபடங்களும் தனிக் குறிப்பீடுகளும்: வரைப்படங்களும் முழு விவர அறிவுறுத்தங்களும்

plant engineer ; எந்திரப் பொறியாளர் : ஒரு குறிப்பிட்ட தொழிலுக்குரிய எந்திர நுட்பச் செயல் முறைகளைச் செயற்படுத்தும் பொறியாளர். தொழிற்சாலைக்குத் தேவையான எந்திரங்களைத் தயாரிப்பது இவரது பொறுப்பு

plaque : (க.க.) அலங்காரத் தட்டு : உலோகம், மரம், தந்தம், வெண்களிமண் போன்றவற்றினாலான அலங்காரத் தட்டு

plasma : (உட.) நிணநீர் : குருதியில் நுண்ணிழைமங்கள் மிதப்பதற்குரிய அடிப்ப்டை ஊனீர்கூறு

plaskmodia : (நோயி.) ஒட்டுயிர் நுண்மம் : மலேரியா போன்ற முறைக் காய்ச்சலுக்குக் காரணமான ஒட்டுயிர் நுண்மம்

plaster : (க.க.) அரைச்சாந்து : கனிக்கல்லை (ஜிப்சம்) போதிய அளவு சூடாக்கி அதிலுள்ள நீரை வெளியேற்றி, நீரற்ற எஞ்சிய பொருளைத் தூளாக்குவதன் மூலம் இது செய்யப்படுகிறது. இது சுவர்களிலும் முகடுகளிலும் பூசுவதற்குப் பயன்படுகிறது

plaster board : (க.க.) சாந்து அட்டை : அரைச் சாந்தினால் செய்யப்பட்டு இருபுறம் காகிதம் ஒட்டிய அட்டை

plaster cast : சாந்து வார்ப்படம்:வார்ப்புக் குடுவையாகவும் காரை மண்ணாகவும் பயன்படும் களிக்கல் தூளினாலான வார்ப்படம்

plastering : மருத்துவக் கட்டிடுதல் : மருத்துவக்கட்டுக் கட்டி மருத்துவம் செய்தல்

plastering trowel: சாந்துக் கரண்டி: சாந்து பூசப் பயன்படும் சட்டுவக் கரண்டி. இது எஃகினா லானது. 4"-5" அகலமும், 10"-12" நீளமும் உடையது. அலகுக்கு இணையாகக் கைப்பிடி கொண்டது

plaster lath: (க.க.) சாந்துக் பட்டிகை: சுவர், தளம், மச்சு ஆகியவற்றில் சாந்து பொருத்துவதற்காக அமைக்கும் மரப்பட்டிகை

plaster of paris: ( (வேதி;க.க.) பாரிஸ் சாந்து: வார்ப்புக் குடுவையாகவும் காரை மண்ணாகவும் பயன்படும் களிக்கல் தூள். வார்ப் படங்களும், மாதிரிப் படிவங்களும் செய்யப் பயன்படுகிறது

plastic: (குழை.) பிளாஸ்டிக்: குழைத்து உருவாக்கத்தக்க வார்ப்புப் பொருள்

plastic art: குழைமக் கலை: உருவாக்கம் சார்ந்த சிற்பம், மட்பாண்டத் தொழில் முதலிய கலைகள்

plasticine: செயற்கைக் களிமண் : குழைவுருவாக்கத்திற்குரிய களி மண்ணினிடமாகப் பள்ளிகளில் பயன்படுத்தப்படும் செயற்கைக் குழைமப் பொருள்

plasticity (இயற்.) குழைவியல்பு: எளிதில் உருமாறுந் தன்மை. வார்ப்பட உருவத்தை ஏற்று இருத்திக் கொள்ளும் திறன்

plasticize: (குழை.) குழைமமாக்குதல்: குழைபொருள் குழுமத்தை உருவாக்குதல் அல்லது வளமாக்குதல்.

plasticizers: (குழை.) குழைமை உருவாக்கப்பொருள்: குழை பொருள் குழுமத்தை உருவாக்குகிற அல்லது வளமாக்குகிற பொருள்