பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/492

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

490

ரப்பான தாடைகளுடைய இடுக்கி போன்ற ஒரு கருவி

pliers: (உலோ.) சாமணம் : சிறு பொருள்களை இடுக்கிப் பிடிப்பதற்கான இடுக்குக் குறடு. இது பல்வேறு வகைகளிலும், வடிவளவுகளிலும் தயாரிக்கப்படுகிறது. சிலவற்றில் வெட்டு முனைகளும் உண்டு

plinth (க.க.) தூண்பீடம்: ஒரு தூணை அல்லது பீடத்தை அடிப்பகுதியையொட்டியுள்ள சதுர வடிவப் பகுதி

plotting points: (கணி.) மனையிட முனைகள் : ஒரு வரைபடத்தில் மனையிடத்தை வரையறுக்கும் முனைகள்

plug: (மின்.) மின்செருகி : மின் கருவிகளுக்கும், மின்வழங்கு ஆதாரங்களுக்குமிடையே இணைப்பு ஏற்படுத்துவதற்கெனச் செருகிப் பொருத்துவதற்குரிய சாதனம்

plug fuse: (எந்.) செருகு மின் காப்பிழை: திருகு இழைத் தொடர்பு மூலம் நிலையில் பொருத்தப்படும் மின்காப்பு இழை

plug gauge: (எந்.) செருகு அளவி: எந்திர வேலைப் பொருள்களின் உள்விட்டங்களை அளவிடுவதற்குப் பயன்படும் செருகு அளவி


plug tap: (எந்.) செருகுநாடா:எந்திரங்கள் மூன்று வரிசைகளி இடையீட்டு நாடா: (1)தொடக்க நாடா; (2)செருகு நாடா; (3) அடி நாடா

plug weld (பற்.) செருகு பற்றாசு:எந்திர உறுப்புகளில் ஒன்றில் அல்லது இரண்டிலும் உள்ள துவாரத்தின் வழியே பற்றாசு பொருத்தி தகடுககளை இணைக்கும் முறை

plumb: (க.க.) செங்குத்து: சுவர் போன்று துல்லியமாக நேர் செங்குத்தாக இருக்கும் அமைப்பு

pulumbago: காரீயம்: எழுது கோலுக்காகப் பயன்படுத்தப்படும் ஈயத்தைப் போன்ற கரிவகை. இது மேற்பரப்புகளில் எளிதில் கடத்தாப் பொருளாகப் பூச்சு வேலைக்கும் பயன்படுகிறது

plumb and level: (க.க.) தூக்கு நூற்குண்டு : துல்லியமான கிடைமட்டத்தையும், துல்லியமான செங்குத்தையும் அறிவதற்காகப் பயன்படும் உலோக அல்லது மர நூற்குண்டு

plumb bob: (க.க.) ஈயக்குண்டு: கட்டிட வேலையில் பயன்படும் தூக்கு நூற்குண்டின் நுனியில் உள்ள ஈயக்குண்டு

plumber : (கம்மி.) குழாய் செப்பனிடுபவர்: ஈயம், துத்தநாகம், வெள்ளியம் முதலியன கொண்டு குழாய், தொட்டி முதலியவற்றைப் பழுதுபார்ப்பவர்

plumbing : குழாய் வேலை : ஈயக் குழாய் முதலியவற்றப் பொருத்துதல், பழுது பார்த்தல் போன்ற வேலை

plummet: தூக்கு நூல்: செங்குத்து ஆழம் பார்ப்பதற்கான கருவியின் தூக்கு நூற்குண்டு

plutonium : (உலோ.) புளுட்டேனியம்|பொன்னாகம் : யுரேனியத்திலிருந்து உண்டான ஒரு புதிய தனிமம்.இதன் அணு எண் 94. யுரேனியும்238; (அணு எண் 92) + 1 நியூட்ரான் = யுரேனியும்239: - 1 எலெக்ட்ரான் - நெப்டியூனியம் (அணு எண் 95)-ஒர் இரண்டா