பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/519

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
517

ருந்து அதன் சுற்று வரைக்கு அல்லது தளப்பரப்புக்குச் செல்லும் ஒரு நேர்கோடு

radius gauge : (எந்.) ஆரை அளவி : மேடான இடை விளிம்புகளையும், வளைவு முனைகளையும் அளவிடுவதற்கான ஒரு கருவி

radius of gyration : (பொறி.) சுழல் ஆரம் : மடிமைத் திரும்புமையை வெட்டுத் தளப்பரப்பினால் வகுப்பதன் மூலம் கிடைக்கும் ஈவின் வர்க்கமூலத்திற்குச் சமமானது. R=√(I/A) R=சுழல் ஆரம், I=மடிமைத் திருப்புமை, A=பரப்பளவு

radius planer: (எந்.) ஆரை இழைப்புளி: வட்டவரைகள் உந்து ஊர்திகளின் இணைப்புகள் முதலியவற்றில் பயன்படுத்தப்படும் ஒரு தனிவகை இழைப்புளி

raffia : (க.க.) பனைநார்: பனையின் மரவகையிலிருந்து எடுக்கப்படும் நார்

rail : (க.க.) கம்பியழி : கம்பித் தடைவேலி, கம்பிக் கைபிடி

rail : தண்டவாளம் : இருப்பூர்திகளுக்கான தண்டவாளம்

rail way track gauge : இருப்பூர்தி பாதை அகலம் : அமெரிக்க இருப்பூர்தித் தண்டவாளங்களுக்கிடையிலான அகலம். இது 4' 8 1/2" அளவு இருக்கும்

rainbow : வானவில் : வெயில் அடித்துக் கொண்டு மழைத்துாறல் விழும் போது, நீர்த்துளிகளில் ஒளிச்சிதறல் ஏற்படுவதன் காரணமாக சூரியனுக்கு எதிர்த்திசையில் வில் போல் காணப்படும் ஏழு நிறங்களின் தொகுதி. இதில் செங்கருநீலம், நீலம், ஊதா, பச்சை, மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு ஆகிய ஏழு வண்ணங்கள் வரிசையாக அமைந்திருக்கும்

rainbow generator : (மின்.) வண்ணக்கோல உருவாக்கி : வண்ணத் தொலைக் காட்சியில் படக்குழாயில் வண்ணப்பட்டை முழுவதையும் உண்டாக்குகிற கருவி

rainbow, secondary : எதிர் வானவில் : வானவில்லின் உட்புறமோ, வெளிப்புறமோ காணப்படும் தலைகீழான நிறவரிசையுடைய வானவில்

raised printing : (அச்சு.) புடைப்பு அச்சு முறை : எழுத்துகள் மேல் வந்து முனைப்பாக இருக்கும்படி அச்சிடும் முறை

rake : (பட்.) சம்மட்டம்: சம மட்டமாக்கப் பயன்படும் கருவி

ram (எந்) தூலப்பொறி : மதிற் சுவர்களைத் தகர்ப்பதற்குரிய உலோகப் பூணிட்ட பெருந்துாலம்

raman effect : (இயற்.) இராமன் விளைவு : ஓர் அலை நீளமுள்ள ஒளியானது (எ-டு: பாதரச விளக்லிருந்து வரும் ஒளி) ஒரு திரவத்திற்குள் அல்லது வாயுவிற்குள் பாயும்போது, அந்தத் திரவத்தின் மூலக்கூறு ஒளியை பக்க வாட்டில் சிதறடிக்கிறது. ஊடகம் ஒருவகைப் பிரகாசமான கோட்டினையும், வேறு சில கோடுகளையும் காட்டும். இந்தப் பக்கக்கோடுகள் திரவத்தின் மூலக்கூறுகளுக்கு எதிராக ஒளியின் துகள்கள் தாக்கி அதனால் ஆற்றலை ஈட்டுவதால் அல்லது இழப்பதால் உண்டாகின்றன. இதனைக் கண்டு பிடித்தவர் இந்திய விஞ்ஞானி சர்.சி.வி இராமன் ஆவார். இந்தக் கண்டுடிப்புக்காக இவருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது