518
rammer : (வார்) திமிசுக் கட்டை : மண்ணை அடித்து இறுக்கும் கருவி
ramp (க.க.) கோட்டைச் சாய் தளம் : கோட்டை அரணில் இரண்டு தரைமட்டங்களை இணைக்கும் சாய்தளம்
random : தொடர்பின்மை :அங்கொன்றும் இங்கொன்றுமான முறைமை, ஒழுங்கற்ற அளவும் வடிவும் கொண்டிருப்பவை
random joints : தொடர்பற்ற இணைப்புக்ள் : மேலொட்டுப் பலகையில் அகலம் சமமாக இருக்கிறதா என்பதைக் கவனத்தில் கொள்ளாமல் தொடர்பின்றிச் செய்யப்படும் இணைப்புகள்
random work : ஒழுங்ககற்ற வேலைப்பாடு : ஒழுங்கற்ற முறையில் அமைக்கப்படும் கல் வேலைப்பாடு. ஒரு சீராக இல்லாத கற்களைக் கொண்டு ஒரு சுவர் கட்டுதல் போன்ற பணி
range at economic speed : (வானூ.) சிக்கன வேக வீச்சு : ஒரு விமானம், உயரத்தில் பறக்கும் எல்லா நிலைககளிலும் மிகவும் சிக்கனமான வேகத்தில் பறக்கும் போது மிக அதிக அளவு செல்லக் கூடிய தூரம்
range at full speed : (வானூ.) முழுவேக வீச்செல்லை : ஒரு விமானம் மிகச் சிக்கனமான வேகத்திலும் உயரத்திலும் பறக்கும்போது செல்லக்கூடிய உச்ச அளவு தூரம்
range at maximum speed : (வானூ.) அதிவேக வீச்சு : விமானம், உயரத்தில் குறிப்பிட்ட நிலைகளில் முழுவேகத்தில் பறக்கும்போது செல்லக்கூடிய மிக அதிக அளவு தூரம்
rapeseed oil : கடுகு எண்ணெய் : கடுகிலிருந்து பெறப்படும் கனமான பழுப்பு எண்ணெய். இது மசகெண்ணெயாகவும் எஃகினைப் பதனப் படுத்துவதற்காகவும் பயன்படுத்தப்படுகிறது
rasp (எந்.) முரட்டு அரம் : கரடு முரடான பரப்புடைய அரம் போன்ற கருவி
raster: (மின்.) எலெக்ட்ரான் ஒளிர்வு : படக்குழாய் திரையில் எலெக்ட்ரான் கற்றையை வீசுவதன் மூலம் உண்டாகும் ஒளிர்வு
ratchet : (எர்.) ஒருவழிப் பற்சக்கரத் தடை: சலாகை மீது அல்லது சக்கரம் மீது அமைந்த பற்களின் இயக்கத்துடன் ஒருவழி அல்லது மறுவழித் தடுக்கும் தடைக்கோல் அமைவு
ratchet bar : (மர.வே.) பற்சக்கரத் தடைச் சலாகை : ஒருவழித் தடைப் பற்சக்கரத்தில் உள்ளது போன்ற பற்கள் கொண்ட ஒரு நேர்ச் சலாகை. இது எந்திரப் பற்களைத் தடுக்கும் அடை தாழினை ஏற்றுக் கொள்ளும்
ratchet bit brace : (மர. வே.) : பற்சக்கரப் பிணைப்புக் கட்டு பற்சக்கரப் பிணைப்புக் கட்டு (படம்)
ratchet drill : (எந்) ஒரு வழித் தடைப் பற்சக்கரத் துரப்பனம்: இது ஒரு நெம்புகோலுடைய கையால்