பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/534

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

532

கப்படும் வட்டவடிவ எஞ்சினைச் சுற்றி வைக்கப்பட்டிருக்கும். இழுவையைக் குறைத்து, குளிர்ச்சியை அதிகரிக்கிறது

ring gauge : (எந்.) வளை அளவி: புற விட்டங்களை அளவிடுவதற்குப் பயன்படும் வளைய வடிவ அளவு கருவி

ring gear : (தானி.) வளையப் பல்லினை : குடம் அல்லது மையத்துவாரம் இல்லாத வளைய வடிவப் பல்லிணை

ripple factor : (மின்.) , அதிர்வலை விகிதம் : ஒரு திருத்து பொறியின் உற்பத்தி அளவி அதிர்வலை மின்னழுத்தத்தின் பயன் மதிப்புக்கும் உற்பத்தி மின்னழுத்தத்தின் சராசரி நேர் மின்னோட்ட மதிப்புக்குமிடையிலான விகிதம்

ripple voltage : (மின்.) அதிர்வலை மின்னழுத்தம்: போதிய அளவு வடிகட்டுதல் இல்லாமையினால் மின் வழங்கீட்டின் நேர் உற்பத்தியில் ஏற்படும் மாற்று மின்னோட்டத்தின் அளவு

riprap : (பொறி.) ஆழ் நீர் அடித்தளம் : ஆழமான நீரில் அல்லது மென்மையான அடிப்பரப்பில் செறிவில்லாமல் சேர்த்துப் போடப்படும் உடைந்த கல் அடித்தளம்

ripsaw (மர.வே.) பிளப்பு ரம்பம் : மரக்கட்டைகளின் நார்வரி அமைப்பின் திசையிலே அவற்றை அனுப்புவதற்கு உதவும் ரம்பம், இதன் பல்லமைப்பு, ஓர் உளியைப் போல் அமைந்திருக்கும்

rise : (க.க) செங்குத்துத் தொலைவு : (1) ஒரு வில்வளைவின் பக்க உச்சிக்கும் வளைமுகட்டின் கீழ்வளைவுக்குமிடையிலான செங்குத்துத் தொலைவு

(2) ஒரு படியின் நிலைக் குத்துப் பகுதி.

rise and run ; (மர.வே.) சரிவு : செங்குத்தான நிலையினின்றும் சரிந்து செல்லும் கோண அளவைக்குறிக்கும் சொல்

riser : (க.க.,) படி நிலைக் குத்து : (1) இரண்டு படிகளின் மேற்பரப்புகளை இணைக்கும் செங்குத்துப் பகுதி (2) நீராவி, நீர் வாயு முதலியவற்றைச் கொண்டு செல்வதற்கான அமைப்பின் செங்குத்து: குழாய் (3) ஒரு கட்டிடத்தின் ஒரு தளத்திலிருந்து இன்னொரு தளத்திற்குச் செல்லும் மின்கம்பிகள் அல்லது மின்கம்பி வடங்கள் அடங்கிய செங்குத்தான காப்புக் குழாய்

rívet:(உலோ.வே.) குடையாணி :மறுபுறம் தட்டிப் பிணைத்து இறுக்குவதற்கான ஆணி. இவை தட்டையான அல்லது தட்டம் போன்ற அல்லது பொத்தான் போன்ற அல்லது காளான் போன்ற அல்லது வீங்கிய கழுத்துப் போன்ற கொண்டையுடையனவாக இருக்கும்

rivet forge : குடையாணி உலை : குடையாணிகளை அவை தேவைப்படுகிற இடத்தில் சூடாக்குவதற்காகக் கொதிகலன் செய்பவர்களால் அல்லது இரும்பு வேலை செய்பவர்களால் பயன்படுத்தப்படும் கையில் எடுத்துச் செல்லக் கூடிய உலை

riveting: குடையாணி அடிப்பு : குடையாணிகளைக் கொண்டு இறுக இணைத்தல் அல்லது பிணைத்தல்