569
smecktit : வெண்களி : கறை துடைப்புக் களிமண் வகை
smelting: (உலோ.) உருக்குதல்: சுரங்கப் பொருட்களை உருக்கி அவற்றிலிருந்து உலோகங்களைப் பிரித்தெடுத்தல்
smithery : பட்டறை : உலோகத் தொழில் நடைபெறும் பட்டறை. கொல்லர் பட்டறை
smock-mill : காற்று விசை ஆலை : முகட்டுப் பகுதி மட்டும் சுழலும் காற்று விசை ஆலை
smoke-ball : புகைத் திரை ஏவு குண்டு : மூடாக்கு புகைப்படமிடப் பயன்படும் விசைக் குண்டு
smoke ball:(மருந்.) உறிஞ்சுவளிக் குளிகை : காச நோய் மருந்தாக ஆவி உள்ளிழுக்கப் பயன்படும் மாத்திரை
smoke-stone : மது நிறமானி : மஞ்சள் நிற மணிக்கல் வகை
smoking: புகைப்பதனம்: பச்சையான மண்பாண்டங்களிலிருந்து ஈரத்தை அகற்றுவதற்கு முதற் கட்டமாகப் புகையாவி பிடித்தல்
smoothing plane: (மர.வே.) இழைப்புளி: தச்சர்கள் பயன்படுத்தும் 23செ. மீ. நீளமும் 4.4 முதல் 5.7செ.மீ. அகலமும் உடைய இரும்பினாலான இழைப்புளி
இழைப்புளி(படம்)
smooting trowel: பூசுகரண்டி:சாந்துப் பூச்சுப் பரப்புகளைச் சமப்படுத்துவதற்காகப் பயன்படும் கரண்டி.
பூசு கரண்டி(படம்)
snake : பாம்பு கம்பி : ஒரு குழாய் அல்லது ஓர் இடைத்தடுக்கு அல்லது பிற அணுக முடியாத இடங்கள் வழியாக மின்கம்பிகளைச் செலுத்துவதற்கு அல்லது இழுப்பதற்குப் பயன்படும் நெகிழ்திறனுடைய மின்கம்பி
snake stone: பாம்புக்கடி மருந்துக் கல் : பாம்புக் கடியைக் குணப்படுத்துவதற்கான ஒரு வகை மருந்துக்கல்
snap-blot : விற்பூட்டு : கதவை மூடும் பொழுது தானே பூட்டிக் கொள்ளும் வில்லமைவு தாழ்ப்பாள்
snap-hook : பற்றிவிடாக் கொளுவி: விற்சுருள் மூலம் இயங்கும் தானே பூட்டிக்கொள்ளும் கொளுவி
snap-lock : விற்பூட்டு : கதவை மூடும்பொழுது தானே பூட்டிக் கொள்ளும் வில் பொருத்திய தாழ்ப்பாள்
snap shot : நொடிப்பு ஒளிப்படம் : நொடிப்பு நேரத்தில் எடுக்கப்படும் ஒளிப்படம்
snap switch : (மின்.) விரைவு மின்விசை: குமிழை அல்லது விரல் கட்டையை வலப்புறமாகத் திருப்புவதன் மூலம் விரைவான இயக்கத்துடன் மின் தொடர்புகளை ஏற்படுத்துகிற அல்லது முடிக்கிற மின்விசை
snail-wheel : நந்தாழி : மணிப்பொறியில் மணியடிப்பதை முறைப்படுத்தும் நத்தை வடிவப்பல் வெட்டுச் சக்கரம்
snarling iron : (உலோ.வே.) புடைப்பு இரும்பு : உலோகக் குடுவையின் உட்புறத்தே கொட்டுவதன் மூலம் புறத்தே புடைப்பு வேலைப்பாடு அமைத்து அழகு செய்வதற்கான இரும்பு