பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/576

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

574

sounding-rod: அடித்தேக்கமானி: கப்பலில் அடித்தேங்கு நீரளவினைக் காணும் கருவி

soundings : கடலாழ அளவீடு: கடலின் ஆழத்தைக் காட்டும் அளவீடுகள்

sound ranging altimeter : (வானூ.) ஒலிவீச்சு உயரமானி : ஒரு விமானத்திலிருந்து ஒர் ஒலி அலை பூமிக்குச் சென்று மீண்டும் விமானத்திற்கு மீள்வதற்குத் தேவையான நேரத்தின் அளவைப் பொறுத்து உயர அளவுகளைக் காட்டும் ஒர் உயரமானி

sound track : ஒலி வரி  : திரைப்படத் தட்டின் ஒலிவரி

sound wave : (மின்.) ஒலி அலை: மனிதரிடம் ஒலியுணர்வை உண்டாக்கும் காற்றின் ஒரு மாற்றுச் செறிமானம் என்றும் செறிவின்மை என்றும் கருதப்படும் ஓர் அலை

source of supply : (மின்.) வழங்கீட்டு ஆதாரம் : மின்னியக்கு விசையினை உண்டாக்கும் ஒரு மின் சுற்றுவழியின் உட்பாட்டுடன் இணைக்கப்பட்டுள்ள சாதனம். இது ஒரு மின்னாக்கியாகவோ, மின்கலமாகவோ, வேறு கருவியாகவோ இருக்கலாம்

southern moss : (தாவர.) தென்பாசி: இதனை லூசியானா பாசி, ஸ்பானியப் பாசி என்றும் கூறுவர். இது மரங்களில் வளர்கிறது. நீண்ட் தோரணங்கள் போல் தொங்கும். காற்றிலிருந்து இது தனக்குரிய உணவுப் பொருளை எடுத்துக் கொள்கிறது. இது மெத்தை, திண்டு வேலைப்பாடுகளில் பெருமளவில் பயன்படுகிறது

southern pine : (தாவர.) தென் தேவதாரு : நீண்ட இலைகளும் மஞ்சள் நிறமும் கொண்ட தேவதாரு மரம். கடினமான கட்டுமானப் பணிகளில் முக்கியமாகப் பயன்படுகிறது

soya bean oil : (வண்.) சோயா மொச்சை எண்ணெய்: பயறு இனம் சார்ந்த ஆண்டுத் தாவரமாகிய சோயா மொச்சை விதையிலிருந் எடுக்கப்படும் எண்ணெய்

space : (அச்சு.) எழுத்திடைவெளி : அச்சில் எழுத்துக்களுக்கிடையிலான இடைவெளி. தட்டச்சில் சொற்களுக்கிடையிலான இடைவெளி

விண்வெளி : விண்ணிலுள்ள அகன்ற இடப்பரப்பு

space age: (விண்.) விண்வெளிக் காலம்: விண்வெளிக்கு ஏவுகணை செலுத்தியும், விண்வெளிக் கலங்களைச் செலுத்தியும் மனித அருஞ்சாதனை புரிந்துள்ள வரலாற்றுப் பருமை வாய்ந்த காலம்

space charge: (மின்.) வெளி மின்னேற்றம்: ஒர் எலெக்ட்ரான் குழலின் எதிர்முனையைச் சுற்றியுள்ள எலெக்ட்ரான் மேகக்கூட்டம்

space craft: (விண்.) விண் வெளிக்கலம்: விண்வெளியில் பறப்பதற்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்ட ஒர் ஊர்தி

space environments (விண்.) விண்வெளிச் சூழல்: விண்வெளியில் நுழையும்போது விண்வெளிக் கலங்களும், உயிர்ப் பிராணிகளும் எதிர்நோக்கும் சுற்றுப்புறச்சூழல்

space platform: விண்வெளி மேடை : அறிவியல் மற்றும் இராணுவ நோக்கங்களுக்குப் பயன்படக்கூடிய பெரிய செயற்கைக் கோள். இது விண்வெளியில் குடியிருப்பதற்கான ஒரு தளமாக வடி