பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/577

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

575

வமைக்கப்படுகிறது. இந்த விண்வெளி மேடையில், குடியிருப்பு வசதிகள், மின்விசை வழங்கீட்டு அமைப்புகள், மற்ற விண்வெளிக்கலங்களிலிருந்து ஆட்களையும் சரக்குகளையும் மாற்றுவதற்கான வசதிகள், அறிவியல் சாதனங்கள், செய்தித் தொடர்புச் சாதனங்கள் ஆகியவை அமைந்திருக்கும்

space probe: (விண்.) விண்வெளி ஆராய்ச்சி: விண்வெளிச்சூழல் பற்றிய புதிய தகவல்களை ஆராய்ந்தறிந்து பூமிக்கு அனுப்புக்கூடிய கருவிகள் அடங்கிய கலங்களைப் பூமியைச் சுற்றி வருவதற்கு அனுப்பி ஆய்வுகள் செய்தல்

space satellite: (விண்.) விண்வெளிச் செயற்கைக் கோள்: பூமி சந்திரன் போன்ற கோளங்களை வட்டப் பாதையில் சுற்றி வருவதற்காக மனிதர் செய்து அனுப்பும் செயற்கைக் கோள்

space ship: விண்வெளிக்கலம்: விண்வெளிக்குச் செலுத்தப்படும் விசையூர்தி

space station: (விண்.) விண்வெளி நிலையம்: வட்டப்பாதையில் சுற்றி வருவதற்காக விண்வெளிக்கு அனுப்பப்படும் ஒரு நிலையம், இதன் உதவியுடன் விண்வெளியில் பயணம் செய்யவும், விண்வெளியை மேலும் ஆராயவும் முடியும்

space time: (விண்.) இடகால தொடரளவு: இடத்தின் மூல அளவையுடன் காலம் இணைந்த இழை வளவான நாலளவைத்திறம்

space travel: (விண்.) விண்வெளிப் பயணம்: விசையூர்திகளில் விண்வெளியில் பயணம் செய்தல்

spacing: (அச்ச.) இடையிடம் விடல்: அச்சில் அழகான தோற்றப் பொலிவு ஏற்படும் வகையில் சொற்களுக்கும், வரிகளுக்குமிடையில் இடையிடம் விட்டு அமைத்தல்

spacistor: (மின்.) வெளிமின்ம பெருக்கி: ஒரு மின்மப் பெருக்கியை டிரான்சிஸ்டர் ஒத்த நான்கு கூறுகள் கொண்ட மின்கடத்தாப் பொருள். இது விண்வெளி மின்னேற்ற மண்டலத்தைப் பயன்படுத்திக் கொள்கிறது. இது மிக உயர் அலைவெண்களுக்கேற்பத் தன்னைத் தகவமைத்துக் கொள்வது. இதனால் உண்டாகும் முக்கிய நன்மையாகும்

spall: (க.க.) சிம்பு/சிராய்: செங்கற்களை அல்லது கற்களை நொறுக்கி ஆக்கிய சிம்பு

span: (வானூ.) இடையகலம்: விமானத்தில் ஒரு இறக்கை முனையிலிருந்து மற்றொரு இறக்கை முனை வரையிலான இடையகல அளவு

கட்டிடக்கலையில் ஆதாரக் கம்பங்களிடையேயுள்ள தனிவளைவு அளவு

spandrel: (க.க.) கவான் மூக்கு: கவான் வளைவுக்கும் அது கவிந்த செங்கோண வட்டத்திற்கும் இடைப்பட்ட மூலையிடம்

spanner: புரிமுடுக்கி: திருகு முடுக்கும் அல்லது கழற்றும் கருவி

spare: (பட்.) உதிரி உறுப்பு: எந்திரங்கள், டொறிகள், ஊர்திகள் வகையில் வேளைக் காப்பீட்டு உதிரி உறுப்பு

spark: (தானி.) மின்விசைப்பொறி : எஞ்சினில் எரிபொருள் ஏரிதல் உண்டாக்குவதற்கான மின்விசைப் பொறி

spark arrester: மின்பொறிகாப் பமைவு: மின்கருவிகளில் தீப்பொறியால் சேதம் உண்டாகாதபடி தடுக்கும் அமைவு