பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
56

தாதுக்களைக் காய்ச்சி வடித்து இது பெறப்படுகிறது. மருந்துகள், பூச்சிக்கொல்லிகள், உள்ளிய உப்புகள், உலோகக் கலவை ஆகியவற்றுக்குப் பயன்படுகிறது

artefact : கை வேலைப்பாடு : இயற்கையாக அல்லாமல் மனிதன் கருவி கொண்டு செய்த கலைத் தொழில் கை வேலைப்பாட்டுப் பொருள்

செயற்கைத் திசு: நுண்ணோக்காடியால் பார்க்கும்போது ஒரு திசுவில் காணப்படும் இயற்கையாக அல்லாமல் செயற்கையாக அமைக்கப்பட்டுள்ள ஒரு பொருள்.

arterioles : (உட) குருதிநாடி: தமனிகளிலிருந்து குருதிநாளங்களுக்கு இரத்தத்தைக் கொண்டு செல்லும் சிறிய இரத்த நாடிகள். பின்னர் சிரைகள் மூலம் இரத்தம் இதயத்திற்குச் செல்லும்

artesian well ; ஆழ்க்குழாய்க் கிணறு : பூமிக்குள் தண்ணிர் ஊற்றெழுந்து மேலெழுந்து வரும்வரை ஆழமாகக் குழாய்களை இறக்கி, அமைக்கப்படும் குழாய்க் கிணறு. இதில் நீர் தன் சொந்த அழுத்தம் காரணமாக நீர் மேலெழுந்து வருகிறது

arthropoda : (உயி) தோட்டு உடலிகள் : நண்டுகள், சிலந்திகள், தேள்கள் போன்ற ஒட்டுத்தோடுடைய இணைப்புடலி உயிரினங்கள்

articulated-type connecting rod: (தானி.) மூட்டு வகை இணைப்புத்தண்டு: V.Y.X அல்லது ஆரை எஞ்சின்களில் பயன்படுத்தப்படும் ஒரு வகைத் தண்டு. இதில் தண்டுகளின் திருகுழுனை, ஒரு பிரதானத் தண்டுடன் இணைக்கப்படுகிறது

artificer: கைவினைஞர்: புதியன புனையும் ஆற்றலுள்ள ஒரு பொறிவலர்; கருவிகளைக் கையாள்வதில் தேர்ந்தவர்

artificial: செயற்கையானது: பொய்யானது அல்லது இயற்கையல்லாதது போலியானது

artificial horizont (வானூ.) செயற்கைத் தொடுவானம்: (1) உண்மையான அடிவானத்தைப் பொறுத்து ஒரு விமானம் எவ் வளவு உயரத்தில் பறக்கிறது என்பதை குறிக்கும் ஒரு சாதனம்

(2) ஒரு நீர்வழிச்செலுத்து கருவியில், ஒரு திரவ மட்டம் போன்ற ஓர் இயற்கையான தொடுவானத்திற்குப் பதிலாகப் பயன்படுத்தப்படும் சாதனம்

artificial magnet (மின்.) செயற்கைக் காந்தம்: இயற்கையான காந்தத்திலிருந்து மாறுபட்டு, காந்தத் தனமை ஏற்றப்படட ஒரு காந்தம்

artificial stone: செயற்கைக் கல் : கல் போன்று தோன்றும் வகையில் செயற்கையாகத் தயாரிக்கப்பட்ட ஓர் உற்பத்திப் பொருள். கல்லைத் தூளாக்கி சிமென்டுடன் கலந்து தயாரிக்கும் கல். சாதாரணமாகத் தயாரிக்கப்படும் ஒருவகைச் செயற்கைக் கல்

artillery-type wheel: (தானி.எந் ) பீரங்கி வகைச் சக்கரம் : உலோகக் குடத்துடனும். புறவட்டப் பகுதியுடனும் இணைக்கப்பட்ட மர ஆரைகள் பொருத்தப்பட்ட சக்கரம்

artisan : கம்மியர் : கைவினைஞர் கைகளைப் பயன்படுத்தி உலோகங்கள்,மரம் முதலியவற்றில் பொருள்களைத் தயாரிக்கும் தொழிலாளி

art metal: கலை உலோகம்: கலையழகுமிக்க வடிவங்களாக வடிவமைக்கப்பட்ட உலோகம்