பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/586

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

584

னின்றும் மேல்நோக்கி ஊசி வடிவில் வளரும் சுண்ணக் கரியகப் பாறை

stail : (வானூ.) விமான விசை யிழப்பு : பறப்பதற்குப் போதிய விமான வேகம் குறைபடுதல்

stalling speed : (வானூ.) விசையிழப்பு வேகம் : விமானத்தின் மிக உயர்ந்த செந்தூக்கான குணக உயரத்தில் விமானம் சீராகப் பறக்கும்போது அதன் வேகம்

stamping: (உலோ.) வடிவாக்கம்: எஃகுத் தகடுகளை அறைவெப்பு நிலையில் படிவ அச்சுகளில் அழுத்தங்களுக்கு உள்ளாக்கிப் புல்வேறு வடிவங்களில் உருவாக்குதல்

stamping press: (அச்சு.) புடைப் பச்சு எந்திரம் : புடைப்புருப்படச் செதுக்கு அச்சு எந்திரம்

stanchion: கம்பம் : பலகணிச் செங்குத்துச் சலாகை

standard : திட்ட அளவு : துல்லிய மான இலக்களவு; முத்திரை நிறையளவு.முன்மாதிரி உயர்வு நயம்

standard atmosphere: (வானூ.) திட்ட அளவு வாயு மண்டலம்: விழா னத்தின் செயல்முறையை ஒப்பீடு செய்வதற்குப் பயன்படும் வாயு மண்டலம்

அமெரிக்காவில் தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் திட்ட அளவு வாயுமண்டலம் என்பது, 40° உயரத்தில் காணப்படும் சராசரி நிலைமைகள் ஆகும்

standard international atmosphere: : (வானூ.) திட்ட அளவு பன்னாட்டு வாயுமண்டலம் : பன்னாட்டுத் திட்ட அளவு வாயு மண்டலம் எனப் பயன்படுத்தப்படுவது சராசரிக் கடல் மட்டத்தில், 15°C வெப்பநிலையில், 1,013.2 மில்லி பார் அழுத்தத்தில், கடல் மட்டத்திலிருந்து 11கி.மீ. வரையில் கிலோ மீட்டருக்கு 65°C இழப்பு வீதத்தில், அதன்பிறகு-56.5°C வெப்ப நிலையில் நிலவும் காற்றழுத்த நிலை

standardized cell : (மின்.) தர அளவு மின்கலம் : துல்லியமாகச் சோதனைகள் செய்வதற்கு, மின்னழுத்தம் மாறாமல் நிலையாக இருக்கக் கூடிய மின்கலம் தேவை. நடைமுறையில் இந்த மின்கலத்திலிருந்து குறிப்பிடும்படியான மின்னோட்டம் எதுவும் எடுத்துக் கொள்ளப்படுவதில்லை. கிளார்க் மின்கலத்தை முதலில் தர அளவு மின்கலமாக பயன்படுத்தினார்கள். இப்போது பொதுவாக வெஸ்டன் மின்கலம் பயன்படுத்தப்படுகிறது

standard knot : (மர.) செந்நிற முடிச்சு : 3.8.செ.மீ.க்கு மேற்பத விட்டமுள்ள ஓர் இறுக்க மான முடிச்சு

standard lamp : தொலை ஒளி விளக்கு : தொலை ஒளி நிலைக் கம்ப விளக்கு

standing matter : (அச்சு.) நிலுவை அச்சுரு : மேற்கொண்டு அச்சடிப்பதற்கு அச்சுக் கோத்து வைக்கப்பட்டுள்ள அச்செழுத்துத் தொகுதி

stand pipe : (பொறி.) நிலைக் குத்துக் குழாய்: நீர்த்தேக்கத் தொட்டி போன்று பயன்படுத்தப்படும் செங்குத்தான பெரிய குழாய் அல்லது நீர்க்கோபுரம். குடிநீர் வழங்குவதில் ஒரே சீரான அழுத்தம் கிடைப்பதற்கு இது பயன்படுகிறது

standard pressure : (கம்.) செந்திற அழுத்தம் : ஒரு சதுர அங்குலத்திற்கு 125 பவுண்டு இயக்க நீராவி அழுத்தத்திற்கு ஏற்புடைய தடுக்கிதழையும் துணைக் கருவிகளையும் குறிக்கும் சொல்