பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/600

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

598

sun compass : (வானூ) சூரியத் திசைகாட்டி : காந்த வட, தென் துருவ திசைக்குப் பதிலாக சூரியனின் திசை பயன்படுத்தப்படும் திசைகாட்டி

sun effect : (குளி.பத) சூரிய விளைவு : சன்னல்கள், கட்டிடச் சுவர்கள் வழியாக அறைகளுக்குள் மாற்றப்பட்ட சூரிய ஆற்றல்

sunspot : (விண்.) சூரியப் புள்ளி/ சூரியக் களங்கம்: சூரியனின் மேற்பரப்பில் காணப்படும் கரும்புள்ளிகள்

sunspot cycle : (விண்) சூரியப் புள்ளிச் சுழற்சி; சூரியனின் மேற்பரப்பில் சூரியப் புள்ளிகளின் எண்ணிக்கையும் பரப்பளவும் சராசரியாக 11.1 ஆண்டுகளுக்கொருமுறை மாற்றமடைதல்

sun-stone : சூரிய காந்திக்கல் : ஒருவகைப் படிகக்கல்

sun-stroke : (நோயி) வெப்ப தாக்கு நோய் : வெயில் கடுமையினால் தாக்குண்டு மயக்கமுறும் நோய்

superbronze : (உலோ) மிகு நேர்த்தி வெண்கலம் : இது அரிமானத்தை எதிர்க்கக் கூடிய மிகுந்த விறைப்புத் தன்மை வாய்ந்த, அலுமினியமும், மாங்கனீசும் அடங்கிய வலுவான பித்தளை

supercalendered : (தாள்) மிகு மெருகு: துணி, தாள் ஆகியவற்றை உருளை எந்திரத்தினால் அழுத்துவதன் மூலம் மட்டுமீறு மெருகேற்றி மழமழப்பாக்குதல்

super charge : (வானூ) மீவிசையேற்றம் : உந்துகலம், விமானம் முதலியவற்றில் நிலவர அழுத்தத்திற்கு அதிகமாக காற்று அல்லது கலவையை அடைத்தல்

supercharged engine: (வானூ) மீவிசையேற்ற எஞ்சின் : விமானம் மிக உயரத்தில் பறப்பதற்காக எஞ்சினுக்கு மீவிசையேற்றம் செய்தல்

supercharger : (தானி) மீவிசைக் காற்றுக் குழாய்: உந்துகலம், விமானம் முதலியவற்றில் அளவுக்குமீறி காற்றடைக்கப்பட்ட குழாய் உள் வெப்பாலையில் மீவிசை அழுத்த மூட்டுவதற்குரிய அமைவு

superconductivity : (மின்.) மிகை மின்கடத்தல் : மின்தடை மறைந்து விடுவதாகத் தோன்றும் முழுப் பூச்சிய வெப்ப நிலைகளில் மின்கடத்தல் நடைபெறும் நிகழ்வு

super control tube : (மின்) மிகைக் கட்டுப்பாட்டுக் குழல் : கட்டுப்பாட்டு வலைச் சார்புடன் மிகைப்புக் காரணி மாறுபடுகிற ஒரு குழல்

super fines : (தாள்) நேர்த்திக் காகிதம் : மிக நேர்த்தியான முறையில் நயமாகத் தயாரிக்கப் பட்ட உயர்தரமான எழுதுவதற்குரிய தாள்

super heated steam : மிகு வெப்ப நீராவி : நீராவி எந்த அழுத்த நிலையில் உண்டாகியதோ அந்த அழுத்தத்திற்கு நேரிணையான வெப்ப நிலையைவிட அதிக வெப்ப நிலையுடைய நீராவி

super heterodyne : மிகை அலை மாற்றி : உள்வரும் உயர் அலைவெண் அலையின் மீது மாறுபட்ட அலைவெண் கொண்ட அதே போன்ற அலையினை மேன் மேலடுக்கும் தத்துவத்தைப் பொறுத்து அமைந்துள்ள ஒரு வானொலி வாங்கி மின்சுற்றுவழி

super imposition : மேற்சுமத்தீடு: தொலைக்காட்சியில் ஓர் ஒளிப் படக் கருவியிலிருந்தும் உருக்காட்சியின் மீது இன்னொரு ஒளிப்படக் கருவியிலிருந்து வரும் உருக்