பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/601

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
599

காட்சி படியச் செய்தல். உருக்காட்சிகளை வேண்டிய அளவுக்கு ஒருங்கிணைத்தல்

superior figures or letters : (அச்சு.) வரிமேல் உருவம் அல்லது எழுத்து :- அச்சுக்கோப்பில் ஒரு வரிக்கு மேலாக அமைக்கப்படும் சிறிய உருவம் அல்லது எழுத்து. B3;Cn

super sonic : (மின்) மிகையொலி அலைவெண்: ஒலி அலைவெண் வீச்சுக்கு மேற்பட்ட அலைவெண்கள்

supersonic : (விண்) ஒலியினும் விரைவு விமானம் : ஒலியைவிட விரைவாகச் செல்லும் விமானம்

super structure : மேற்கட்டுமானம்: ஒரு கட்டிடத்திற்கு மேலே கட்டப்படும் கட்டுமானம்

supplement of an angle :துணைக்கோணம்: கோணத்துடன் இணைந்து நேர்க்கோணமாகும் துணைக்கோணம்

suppressor : (மின்) அடக்கி : தானியக்கச் சுடர்மூட்டு அமைப்புகளிலிருந்து வானொலி இடை யீட்டினை நீக்குவதற்குப் பயன்படும் ஒரு சாதனம்

suppressor grid: (மின்) அடக்கி மின்வலை : ஓர் எலெக்ட்ரான் குழலில், திரைவலைக்கும் தகட்டுக்கு இடையில், தகட்டிலிருந்து இரண்டாம் நிலை எலெக்ட்ரான்களை எதிர்ப்பதற்கு அல்லது அடக்குவதற்குள்ள ஒரு மூன்றாவது மின்கம்பி வலை

surd : (கணி.) பகுபடா எண் : பதின் கூற்றில் தீராக் கீழ்வாய்ப் பின்னம்

surface action : (இயற்) மேற்பரப்பு வினை : மேற்பரப்பில் விளைவுகளை உண்டாக்கும் வினை. எடுத்துக்காட்டு:வண்ணம் பூசிய பரப்பில், புகை, ஈரம் முதலியவற்றின் வினை

surface alloy transistor: (மின்) மேற்பரப்பு உலோகக் கலவை மின் பெருக்கி : இது ஒரு சிலிக்கன் இணைப்பு மின்பெருக்கி (டிரான் சிஸ்டர்), இதில் அலுமினிய மின் முனைகள், ஒரு மெல்லிய சிலித்கன் படிகத்தின் இருபுறங்களிலும் செதுக்கப்பட்டுள்ள குழிகளில் படிகின்றன

surface barrier transistor : (மின்.) மேற்பரப்புத் தடை மின் பெருக்கி : மின் ஊர்திகளின் சேகரிப்பும், வெளிப்பாடும் நடை பெறுகிற இடைத்தொடர்பு முனைகள், மேற்பரப்பில் அமைந்துள்ளவாறு அமைக்கப்பட்டுள்ள மின் பெருக்கி (டிரான்சிஸ்டர்)

surface-craft :அலை மேவுலகம்: நீர் மூழ்கியல்லாத கப்பல்

surface gauge : மேற்பரப்பு அளவி ; எந்திர நுட்பாளர்கள் உள்வரியிடுவதற்குப் பயன்படுத்தும் கருவி

surface grinding : (உலோ) மேற்பரப்புச் சாணை: தட்டையான உலோகப் பரப்புகளைச் சாணையிட்டுத் தீட்டுதல்

surface noise : (மின்) மேற்பரப்பு ஒலி : ஓர் ஒலிப்பதிவில், ஓர் ஒலித்தட்டினை வெட்டியெடுத்த பின்பு அதன் வரிப்பள்ளங்களில் தேங்கியிருக்கும் சொரசொரப்பான துகள் களிலிருந்து அல்லது ஒழுங்கற்ற பரப்புகளிலிருந்து எழும் ஒலி

surface speed : (எந்) மேற்பரப்பு வேகம் : ஒரு மேற்பரப்பு ஒரு நிமிடத்திற்கு எத்தனை ஆடி நகர்கிறது என்பதைக் குறிக்கும் இயக்க வீதம். இது ஒரு நேர்கோட்டில்