600
இயங்கும் பரப்பையோ, நீள் உருளை வரைகோட்டில் இயங்கும் பரப்பையோ குறிக்கும். எடுத்துக்காட்டாக, ஒரு சக்கரத்தின் மேற்பரப்பு வேகத்தைக் கணக்கிடுவதற்கு அடிக்கணக்கிலான அதன் சுற்றளவை, அது ஒரு நிமிடத்தில் சுழலும் சுழற்சிகளின் எண்ணிக்கையினால் பெருக்குதல் வேண்டும்
surface water : (கம்மி.) மேல் ஒடுநீர் : நிலமேற்பரப்பின் மீதாக ஒடும் நீர் சாக்கடைநீர்
surveying : நிலஅளவை : நிலத்தை அளவிடும் அறிவியல்
surveyors compass: நிலஅளவையாளர் திசைகாட்டி : கிடைமட்டக் கோட்டிற்கும் ஒரு காந்தமுள்ளுக்கு மிடையில் திசை வேறுபாட்டைக் குறிக்கும் கருவி. இதனை அளவையாளர்கள் பயன்படுத்துகிறார்கள்
suspension : (வேதி.) மிதவல்: நீர்மத்தில் மேலுமில்லாமல் கீழுமில்லாமல் இடைமிதவலாக மிதக்கும் மிதவைப் படலம்
swab : (வார்.) ஒத்துப்பட்டை : வார்ப்படத்தில் ஒரு தோரணியைச் சுற்றியிருக்கும் மணலை ஈரத்தில் ஒற்றியெடுக்கும் துணித்துண்டு அல்லது உறிஞ்சு பஞ்சு
swag : தோரணம் : அறைகலன்களை அலங்காரமாகச் செய்வதற்கான தோரண வடிவமைப்பு
swage : பணியிரும்பு : பதிவச்சுப் பொறியினால் வடிவம் கொடுப்பதற்குப் பயன்படும் பணியிரும்பு
swage block: பதிவச்சுருக் கட்டை : பணியிரும்பை உருவாக்குவதில் பயன்படும் துளை பள்ளங்களையுடைய கட்டை
swages : (உலோ.) உலோக வடிவாக்கப் பொறிகள் : நீர் உருளை உறுப்புகளை வடிவமைப்பதற்கான உட்குழிவான முகப்புகளையுடைய உலோகங்களைக் காய்ச்சி அடித்து உருவாக்கும் கருவிகள்
swarf: (உலோ.) உலோகச் சிம்பு: சாணைக்கல்லில் உலோகப் பொருட்களைச் சானை தீட்டும் போது சிதறும் உலோகச் சிம்பு செத்தை
sweating sickness: (நோயி.) வியர்வைக் காய்ச்சல்: லண்டனில் 15, 16 ஆம் நூற்றாண்டுகளில் நிலவிய கொடிய வியர்வைக் காய்ச்சல் கொள்ளை நோய்
swash letters: (அச்சு.) வளைவுக் கோட்டு எழுத்து: அச்சுப் பணியில் வளைவு கோடுகளினாலான அலங்கார எழுத்துக்கள்
sweating: (உலோக.) உலோக இணைப்பு: உலோகப் பகுதிகளைப் பரப்பின் இழைவாய் ஒன்றுபடுத்திப் பொருத்துதல்
swedish iron: (உலோக.) சுவீடிஷ் இரும்பு: பாஸ்வரம், கந்தகம் சிறிதும் இல்லாத மிக உயர்ந்த தரமான இரும்பு
sweet: அக வளைவியக்கம்: ஒரு தொலைக்காட்சிப் பட அல்லது ஒளிப்படக்குழாயில் எலெக்ட்ரான் கற்றையின் இயக்கம்
sweet circuit: (மின்.) வீச்சு மின்சுற்றுவழி: ஓர் எதிர்மின் முனைக் கதிர்க்குழலில் ஒரே விகித எலெக்ட்ரான் கற்றையை இயக்குவதற்காக கால இடைவெளிகளில் செலுத்தப்படும் மாறுபடும் மின்னழுத்தம்
sweet generator: (மின்.) வீச்சு மின்னாக்கி: ஒரு வானொலி அலை வெண் மின்னாக்கியாகப் பயன்படுத்தப்படும் ஒரு சோதனைக் கருவி. இதில் ஒரு சோதனைக் கருவி. ஒரு சராசரி அலை