பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/608

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

606

tail boom : (வானூ) வால் தண்டு ;வால் பகுதிகளையும் பிரதான ஆதாரப் பிரிவுகளையும் இணைக்கிற தண்டு

tail heavy: (வானூ ) வால் இறக்கம் : (விமானம்) காற்றை விட எடை கூடிய விமானம் பறக்கும் போது நீளவாட்டு கட்டுப்பாடு விடுபடும்போது வால்புறம் கீழ்நிலையில் இருக்கும். அப்போது விமானி குறிப்பிட்ட உயரத்தி லேயே இருக்க விரும்பினால் கண்ட்ரோல் தடியை இயக்கியாக வேண்டும்

tailing : (க.க.) புடைப்புக்கல் : சுவரில் செருகப்பட்டு வெளியே துருத்தி நிற்கும் செங்கல் அல்லது கல்லின் பகுதி

tail joist (க.க.) வால் உத்தரம்: ஒரு முனை தலை உத்தரத்துடன் வந்து முடிகிற உத்தரம்

tailless airplane : (வானூ) வாலில்லா விமானம்: நிலைப்படுத்த பயன்படுத்தப்படுகிற பகுதிகள் இறக்கைக்குள்ளாகவே அமைக்கப்பட்ட விமானம்

tail light , (வானூ;பொறி.) வால் விளக்கு பின்புற விளக்கு: ஒவ்வொரு மோட்டார் வாகனத்திலும் பின்புறத்தில் சட்டப்படி அமைக் கப்பட வேண்டிய இரவில் பூட்டப் படுகையில் எரிய வேண்டிய சைகை விளக்கு

taipiece (அச்சு.) இறுதிப்பகுதி முத்தாய்ப்பு :: ஒரு நூலின் ஓர் அத்தியாயத்தின் முடிவில் அல்லது அச்சிடப்படுகிற குறி

tailpiece : ( கம்.) சாக்கடை வடி குழாய் : கழிவு நீர்த்தொட்டியின் அடிப்பகுதியில் இணைக்கப்படும் 'T' வடிவ படிகுழாய்

tail pipe : உறிஞ்சு குழாய்

tail print : வால் அச்சு : அச்சுக் குள்ளிருந்து மாதிரி வடிவத்தை வெளியே எளிதில் எடுப்பதற்கான வகையில் மைய வடிவத்தில் அமைந்த பிடி, உள் அச்சு நன்கு அமைய, அதற்கு வசதி செய்வது

tail screw: வால் திருகாணி: கடைசல் (லேத) எந்திரத்தில் நிலைப்பிடிமானத்தின் தண்டை இயக்கச் செய்யும் திருகாணி

tail skid: (வானூ.) வால் சறுக்குக் கட்டை: தரையில் நிற்கிற விமானத்தின் வால் பகுதியைத் தாங்கி நிற்கிற சறுக்குக் கட்டை

tail slide: (வானூ.) வால் சறுக்கு விமானம்: செங்குத்தாக உயரே ஏறிய பிறகு கீழே சறுக்குகிற நிலை ஏற்பட்டதைத் தொடர்ந்து விமானத்தின் வால், கீழ்நோக்கியதாக பின்புறம் கீழ்ப்புறமாகச் செயல்படும் நிலை

tail spin: (வானூ) வானூர்தியின் கழல் கழுகுப் பாய்ச்சல்

tail stock: (எந்.) வால் பிடிமானம்; ஒரு கடைசல் எந்திரத்தில் ஒரு பொருளைப் பொருத்துவதில் ஒரு புறம் நிலையாக இருத்திய தலைப் பிடிமானம் இருக்கும். மற்றொரு புறத்தில் முன்னும் பின்னும் நகர்த்தக் கூடிய வால் பிடிமானம் இருக்கும்

tail stock spindle: (எந்.) நிலைப்பிடிமானத் தண்டு: கடைசல் எந்திரக் கடைசல் நிலைப் பிடிமானத்தில் செயலற்ற மையத்தைத் தூக்குகிற செருகு குழல் அல்லது தண்டு

tail surface: (வானூ) வால் பரப்பு: ஒரு விமானத்தின் வால் பகுதியில் உள்ள நிலைப்படுத்துகிற அல்லது கட்டுப்படுத்துகிற பரப்பு