பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/614

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

612

கிடைமட்டமாக ஏற்படுகிற பாதிப்பு, படம் கிழிவது போன்று தோன்றும்

technical : தொழில் நுட்பம் : குறிப்பிட்டதொரு கலை அறிவியல் பிரிவு, வேலை, தொழில் போன்றவை தொடர்பான தொழில்நுட்பப்பள்ளி, தொழில் நுட்பச் சொல் போன்றது

technical director : தொழில்நுட்ப இயக்குநர் : ஒரு ஸ்டுடியோவில் தொழில்நுட்பக் கருவிகள், ஊழியர்களை மேற்பார்வையிடுபவர்

technicolour: திரைப்பட வண்ணம்: திரைப்படத் துறையில் வண்ண ஒளிப்பட நுட்பமுறை

telekinesis : சேய்மை இயக்கு திறம்: தொடர்பின்றியே தொலைவிலுள்ள பொருளை இயக்கும் அருந்திறம்

telemechanics: வானிலை இயக்கு திறல் :தொலைவிலுள்ள எந்திரங்களை வான் அலையாற்றல் மூலம் இயங்கச் செய்யும் கலை

technology: தொழில் நுட்பவியல்: தொழில் துறைக் கலைகள் சம்பந்தப்பட்ட அறிவியல் துறை

tee :இணைப்பி: (குழாய்.) வெவ்வேறு குறிக்களவுள்ள குழாய்களைப் பொருத்துவதற்கான இணைப்பி அல்லது குழாயின் ஒட்டத் திசையை மாற்றுவதற்கான இணைப்பி. மாட்டுத் தலை இணைப்பியல் நுழைவாயைவிடத் திறப்பு வாய் பெரிதாக இருக்கும். நேர் இணைப்பியல் இரு வாய்களும் சம அளவில் இருக்கும்

telecast :_தொலைக்காட்சி ஒளி பரப்பு : தொலைக்காட்சி ஒளிபரப்பு

telecommunication : தொலைத்தொடர்பு: தொலைப் போக்குவரத்து, தந்தி, கடலடி வடக்கம்பி, கம்பியில்லாத் தந்தி-தொலைபேசி முதலியன வழியாகத் தொலைச் செய்தி அறிவிப்பு முறை

telecon : வானொலித் தொலை முறை அமைவு : வானொலி-தந்தி வட- இணைப்பு மூலமாகத் தொலைக்காட்சித் திரையில் செய்தி ஒளியிட்டுக் காட்டுவதன் மூலம் பலர் ஒருங்கு கூடி கலந்தாய்வு செய்ய விழிகோலும் அமைவு

telegraph : (மின்) தந்தி: கம்பி வழியே செய்திகளை அனுப்புவதற்கும் பெறுவதற்குமான சாதனம். இதன் வழியே எழுத்துகளைக் குறிக்கின்ற வகையிலான மின் சிக்னல்கள் அனுப்பப்படும்

telegraph - key: தந்தி மின்னோட்ட இயக்கமைவு: தந்தித் துறையில் மின்னோட்டத்தைப் பாய்ச்சவோ தடுக்கவோ வகை செய்யும் பொறியமைவு

telekinema:திரைக்காட்சி: தொலைக்காட்சி மூலம் திரைப் படங்கள் காட்டும் திரைக்காட்சி

telemeter : தொலைவுமானி : நில அளவையிலும் பீரங்கி சுடும் பயிற்சியிலும் தொலைவைக் கணிப்பதற்கான கருவி

telemeter : தொலைக் கணிப்பியல் :

telephone : (மின்) தொலைபேசி: குரலை நீண்ட தொலைவுகளுக்கு மின் சிக்னல் வடிவில் அனுப்புவதற்கான சாதனம்

telephone drop:(மின்.) தொலைபேசி விழுதுண்டு: தொலைபேசி சுவிட்ச் பலகையில் கவன ஈர்ப்புத் துண்டுகளில் ஒன்று கீழே விழும் போது தொலைபேசி தொடர்பாளியின் கவனம் ஈர்க்கப்