பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/623

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
621

ஓர் அணு உலையில் நியூட்ரான் களுக்கு ஆதாரமான யுரேனியம், என்ற தனிமமாக மாற்ற லாம். இதன் ஆக்சைடு (th02) வாயு ஒளித்திரை வலைகள் தயாரிக்கப் பயன்படுகிறது

(2) அணு எண் 90 கொண்ட ஒரு தனிமம். இது எதிர்முனை உமிழ்விப் பொருளாகப் பயன்படுகிறது

thixotropic : (குழை) திக்ஸோட்ரோபிக் : மிக நைசாகப் பொடி செய்த சிலிக்கா போன்ற கரையாத திடப்பொருட்கள் அடங்கிய திரவ பிளாஸ்டிக்குகள். கலத்தில் இருக்கும் போது பாகு போல் இருக்கும். பரப்பில் பூசினால் திரவமாகி விடும். இவ்வகைப் பிசின் சரிவான பரப்பில் பூசப்பட்டால் வழிந்து இறங்காமல் பரப்பின் மீது நிலையாக இருக்கும்

thixotropy : (வேதி; குழை.) திக்ஸோட்ரோபி : சில சேர்மானங்கள் அசையா நிலையில் கூழ்மமாக இருந்து நன்கு கிளரும்போது திரவ நிலைக்கு உள்ளாகும் தன்மை

thread : நூல் : பட்டு, பருத்தி அல்லது கம்பளி போன்று வழக்கமாக உலோகமல்லாத பொருளால் ஆன மெல்லிய கயிறு அல்லது இழை

thread-cutting screws : (எந்) புரிவெட்டும் திருகு : வரிவரியாக அமைந்த வெட்டுமுனை கொண்ட ஸ்குருக்கள் உள்ளே இறங்கும் போது புரிகள் வெட்டப்படும். இது புரி தண்டை தேவையற்ற தாக்குகிறது. உலோகத் தகடுகள், மென்மைக் கலோகங்கள் பிளாஸ்டிக் போன்றவற்றில் புரியிட ஏற்றது

threaded sleeve : (பட்) புரியிட்டயிட்ட உறை : உலோகத்தால் ஆன உள்ளீடற்ற உறைகள். வழக்கமாக உருளை வடிவில் உட்புறம் புரியிடப் பட்டது. இரு தண்டுகள் அல்லது இரு குழாய்களை இணைப்பதற்குப் பயன்படுவது

thread gauge : (உலோ.வே). புரியளவு மானி: திருகு புரிகளின் இடைவெளியைச் சோதிப்பதற்கான அளவுமானி

threading : புரியிடுதல்: உள்புறத்தில் அல்லது வெளிப்புறத்தில் திருகு புரிகளை அமைத்தல்

thread mitler : (எந்) புரி கடைசல் எந்திரம் : புரிகளை இடுவதற்கும், வெட்டி வேலைப்பாடு செய்வதற்குமான கடைசல் எந்திரம்

thread plug: (குழை) புரிசெருகு: உள்ளிடைப்புரிகளை உருவாக்குவதற்காகச் செருகப்படுகிற வார்ப்பு:அச்சுப்பகுதி, வேலைக்குப் பிறகு வெளியே திருகி எடுக்கப்பட வேண்டியது

thread - rolling : (எந்) புரியமைத்தல் : ஒரு உலோகக் கட்டியில் உறுதியான உருளை அல்லது அச்சைச் செலுத்தி திருகுபுரிகளை அமைத்தல். அப்போது உள்ளிருந்து உலோகச் சுருள் துணுக்குகள் வெளிப்பட்டு உள்ளே புரிகள் அமையும். இவ்விதப் புரிகள் வலுவானவை; செலவு குறைவு

threads per inch: (எந்) அங்குல வாரிப் புரி: இது புரியின் அளவைத் குறிப்பது, எந்த ஓர் குறுக்களுவுக்கும் இவ்வளவு எண்ணிக்கை யிலான புரிகள் என்று நடைமுறை அளவு உள்ளது. அதாவது , அங்குலக் குறுக்களவு. அங்குலத்துக்கு 13 புரி. ஓர் அங்குலக் குறுக்களவு அங்குலத்துக்கு 8 புரி. இப்படியாக புரிகளின் நோக்கம் (1) ஸ்குரு போல்ட், நட்டு ஆகியவற்றை ஒன்றாக இருத்தி வைத்தல் (2)