பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/627

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

625

tick (உயி..) உண்ணி : நாய், ஆடு, மாடுகளைப் பற்றிக் கொண்டு இரததத்தை உறிஞ்சும் சிலந்திக் குடும்பத்தைச் சேர்ந்த நச்சு ஈ வகை

tie ; (க.க.) செருகு துண்டு : மற்ற துண்டுகள் விழாமல் அவற்றின் இடத்தில் இருப்பதற்காக ஒரு துண்டைச் செருகுதல் அல்லது சேர்த்தல்

'tie beam . (க.க.) வரிக்கை : கட்டு உத்தரம்: முக்கோண வடிவக் கூரையில் அமையும் சாய்வு உத்தரங்களின் கீழ் துணிகள் விலகி விடாதபடி தடுக்கிற அல்லது நிலையாகச் சேர்த்து வைக்கிற உத்தரம்

tie dyeing : கட்டுச்சாயம்: சாயம் ஏற்றும்போது துணியின் சில பகுதிகள் நூலினால் நன்கு கட்டப்பட்டு அப்பகுதிகளில் சாயம் ஏறாத படி தடுக்கப்படுகின்றன. நூல் அகற்றப்பட்டதும் தக்க டிசைன்கள் வெளிப்படுகின்றன

tie piece : கட்டு துண்டு : விறைப்பேற்று வதற்கு ஒரு துண்டின் மீது பயன்படுத்தப்படுகிற விறைப்புத் துண்டு. இது வரைபடத்தில் காட்டப்படுவதில்லை. வார்ப்படத்தில் இது போன்று தயாரிக்கவும் தேவையில்லை

tier : அடுக்கு : பெட்டிகள் அடுக்கப்பட்டது போல ஒன்றன்மீது ஒன்றாக அடுக்குவது

tiering machine : அடுக்கும் எந்திரம் : ஆட்களை ஈடுபடுத்த வேண்டிய அவசியமின்றி, பொருட்களை ஒன்றன்மீது ஒன்றாக அல்லது வரிசையாக அடுக்கும் பணியைச் செய்யும் எந்திரம்

tie rod : (தானி.எந்.) இணைப்புத் தண்டு : ஒரு மோட்டார் வாகனத்தில் முன்புறச் சக்கரங்களை இணைக்கும் குறுக்குத் தண்டு. வண்டி திருப்பப்படும்போது சக்கரங்கள் இணைந்து செயல்பட உதவுகிறது

tie-up material : (அச்சு) கட்டுநிலை கோக்கப்பட்ட எழுத்துக்களை ஒன்று சேர்த்து கட்டி வைப்பதற்குப் பயன்படுத்தப்படுகிற அனைத்துப் பொருட்கள்

tight fit: (எந்.) அழுத்தப் பொருத்தம் : சிறிதளவு அழுத்தம் மூலம் செய்யப்படுகிற சரிபொருத்தம்

tight pulley ; (எந்) இறுக்கக் கப்பி : தண்டுடன் இணைக்கப்பட்ட கப்பி இதற்கு மாறான அமைப்பில் தண்டுடன் இணையாமல் இருக்கிற கப்பியானது சுலபத்தில் சுழலும்

tile : (க.க.) ஓடு: மண், சிமென்ட் அல்லது கண்ணாடியால் ஆனவை. கூரையில் அமைக்கப் பயன்படுத்தப்படுபவை. கலையம்சம் பொருந்திய டிசைன், நேர்த்தி ஆகியவற்றுடனும் தயாரிக்கப்பட்டு தரையிலும், சுவரிலும் பதிக்கப் பயன்படுபவை

tilt top table: சாய்ப்பு மேசை : பீடம் கொண்ட மேசை, இதன் மேல் பலகை கீல் கொண்டு பொருத்தப்பட்டுள்ளதால் கிடைமட்ட நிலையிலிருந்து செங்குத்து நிலைக்குக் கொண்டு வர இயலும்

timber: வெட்டுமரம்: மரம்: பல் வேறான வேலைகளுக்கு ஏற்ற வகையில் நீண்ட கட்டைகளாக சதுரப் பலகைகளாக அறுத்து வைக்கப்பட்டுள்ள மரம். காடுகளில் வெட்டப்பட்ட மரக் கட்டைகளிலிருந்து இவ்விதம் தயாரிக்கப் படுகிறது

timber trestle: (பொறி.) மரக் கட்டுமானம்; ஓடை அல்லது பள்