பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/628

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

626

ளங்கள் மீது ரயில்பாதை அமைப்பதற்குப் பயன்படுத்தப்படுகிற மரக்கட்டுமானங்கள். செங்குத்தாக, கிடைமட்டமாக, குறுக்காக மரக்கட்டைகளை அமைத்துக்கட்டப்படுபவை

time measure: கால அளவு:

60 வினாடி - 1 நிமிடம்

60 நிமிடம் - 1 மணி

24 மணி - 1 வாரம்

7 நாள் - நாள்

28, 29, 30 - 1 காலண்டர் அல்லது 31 நாட்கள் மாதம்

30 நாள் - 1வட்டிக் கணக்குக்கு ஒரு மாதம்

52 வாரம் - 1ஆண்டு

365 நாள் - ஆண்டு

366 நாள் - 1 லீப் ஆண்டு

timer: (தாணி.) முன்னேற்பாட்டுக் கருவி: மோட்டார் வாகனத்தில் சிலிண்டர்களில் தக்க சமயத்தில் தீப்பொறி தோன்றும் வகையில் முதன்மை தீப்பற்று சர்க்கியூட்டைத் துண்டிப்பதற்குப் பயன்படும் கருவி

time switch: (மின் ) நேர ஒழுங்கு மின்விசை மாற்றுக்குமிழ்: கடிகாரத்தினால் கட்டுப்படுத்தப் பட்டு குறித்த நேரத்தில் இயங்கும் சுவிட்ச்

timing: (தானி எந்.) காலத் திட்ட அமைப்பு: 1. மிகப் பயனுள்ள குதிரை சக்தி கிடைக்கின்ற வகையில் என்ஜின் வால்வுகளையும், கிராங்க்ஷர் ப்டையும் அவற்றின் உரிய இடத்தில் அமைத்தல். 2.பிஸ்டனின் முகப்பு:மீது மிக அதிகபட்ச பயன் பிளவு ஏற்படு கிற வகையில் பிஸ்டனின் மேற்புற செயலுறா நிலைக்கு ஏற்ப எரி தலைத் துண்டிக்கும் உறுப்பைப் பொருத்துகிற நிலை

timing gear: கால ஒழுங்கு பல்லிணை: மோட்டார் வாகன என்ஜினில் கேம்ஷாப்டை இயக்கும் பல்லிணைகள். பிஸ்டன்களின் இயக்கத்துக்கு ஏற்ப கால ஒழுங்குடன் வால்வுகள் திறந்து மூட கேம் ஷாப்ட் உதவுகிறது. கிராங்க் ஷிாப்ட் இருமுறை சுழன்றால் கேம் ஷாப்ட் ஒரு முறை சுழலும். எனவே இந்த கியர்கள் இயக்கம் 2-க்கு ஒன்று என்ற விகிதத்தில் அமைய வேண்டும்

timing marks: (தானி) கால ஒழுங்குக் குறியீடு: எரிதல்; என்ஜின் பிளை வீல் அல்லது இயக்கச் சமநிலை மீதும் முதல் நம்பர் சிலிண்டர் எரிதலுக்குத் தயாராகிற நிலை மிகச் சரியாகப் பொருந்தி நிற்பதைக் காட்டுவதற்காகச் செய்யப்பட்டுள்ள குறியீடுகள்

வால்வு: மெக்கானிக்குகள் வால் வுகளை பிஸ்டன் நிலைக்கு ஏற்ப கால ஒழுங்கு இருக்கும் வகையில் அமைப்பதற்காக வால்வு மீதுள்ள குறியீடுகள்

tin: (உலோ.) ஈயம்: வெள்ளி போன்று பளபளப்பான உலோகம். அடர்த்தி எண் 7, 3 தொழில் காரியங்களுக்கு, குறிப்பாக கலோ கங்களைத் தயாரிக்க மிக முக்கியத்துவமும், விலை மதிப்பும் கொண்டது

tincture: சாராயக் கரைசல் மருந்து வகை: ஒரு பொருளிலிருந்து கரைப்பான் மூலம் பிரித்தெடுக்கப்படுகிற மிக நன்கு கரைகிற, நைசான பகுதிகள்

tinder: எரி துண்டு: தீயைக் கொழுந்து விட்டு எரியச் செய்வதற்காகத் தீயில் போடப்படுகிற உலர்ந்த, எளிதில் எரியக்கூடிய பொருள்

tinning: (உலோ.) ஈயம் பூசுதல்: (1) தகரத் தயாரிப்பில் இரும்புத் தகடுகள் மீது அளிக்கப்படுகிற மெல்லிய பூச்சு