பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/632

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

630

tonsilitis:(நோயி.)அடிநா அழற்சி: அடிநாச்சதையில் ஏற்படும் அழற்சி நோய்

tool bit (எந்.) வேலைக் கருவித் துண்டு : உயர்வேக உருக்கினால் ஆன சிறிய துண்டு. வேலைக் கருவிப் பிடிப்பானில் வைக்கப்பட்டு வெட்டு வேலைக் கருவியாகப் பயன்படுவது

tool box or tool head : (எந்) வேலைக் கருவிப் பெட்டி: (மெஷின்) இழைப்பு எந்திரத்தில் வேலைக் கருவி இடம் பெற்றுள்ள குறுக்குப் புறத்துடன் தொகுத்து வைக்கப்பட்டுள்ள உறுப்புகள். கருவிக்கு வேலை அளிக்கின்ற வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளது

tool holder for lathe or plner (பட்.) வேலைக்கருவி பிடிப்பான் : தண்டு அல்லது உருக்கினால் ஆன ஒரு துண்டு வெட்டுவதற்கான வேலைக் கருவியை இத்தண்டுக்குள் செருக முடியும். மிக விலை உயர்ந்த உருக்கினால் ஆன வேலைக் கருவியையும் இவ்வகையில் பயன்படுத்த முடியும். இப்பிடிப்பானை நகர்த்த வேண்டிய அவசியமின்றியே வேலைக் கருவியை அப்புறப்படுத்தமுடியும்

tooling calf: கன்றுத் தோற்கருவி: பட்டை மூலம் பதனிடப்பட்ட தோல் புத்தக பைண்டிங் செய்யும் போது எழுத்துக்களைப் பதிக்கும் காரியத்துக்கு மிகச் சிறந்தது

tooling sheepskin : சிறுபொருள் ஆட்டுத்தோல்: விலை மலிவான நிறங்களில் கிடைக்கிற தோல். பர்ஸ், கார் செருகி, சாவி உறை முதலிய சிறுபொருள்களைத் தயாரிப்பதற்குப் பயன்படுவது

tooling up : கருவிகளை ஆயத்தமாக்குதல் : ஒரு பொருளை நிறைய அளவில் உற்பத்தி செய்யும் முறைகளைப் பயன்படுத்தும் நோக்கில் உற்பத்திக்குத் தேவையான சிறப்புக் கருவிகள், கட்டுமானச் சாதனங்கள் ஆகியவற்றைத் தயாரித்து ஆயத்தப்படுத்துதல்

tool, knurling ; (பட்) முகட்டுக் கருவி: மடிப்பு போன்ற பல முகடுகளைக் கொண்ட கருவியை க் கொண்டு கழலும் உலோகப் பொருள்மீது பல வரிப் பள்ளங்களை உண்டாக்குவது, அழகுக்காகவும், நல்ல பிடிப்புக்காகவும் இப்படிச் செய்யப்படும்

tool maker : (எந்) வேலைக் கருவியாளர் : பணிச் சாதனங்கள் பொருத்திகள், அளவு மானிகள் முதலியவற்றைத் தயாரிப்பதில் தேர்ச்சி பெற்றவர்

tool makers clamp : கருவியாளியின் திருகுபிடி : மரத்தச்சர் பயன்படுத்தும் திருகுபிடி போன்ற ஆனால் அதைவிடச் சிறிய வடிவிலான முற்றிலும் உலோகத்தால் ஆன பிடிப்புச் சாதனம்

tool post : (எந்) தாங்கு கருவி; பற்றுக்கருவி : உச்சியில் வளையத்தைக் கொண்ட தம்பம். கடைசல் எந்திரத்தின் மேற்புரத்தில் அமைந்த மரு. இந்த வளையத்துக்குள் வெட்டுக் கருவி பொருத்தப்படும்

tool room : (எந்) கருவி அறை; வேலைக்கருவி அறை : வேலைக் கருவிகள் சேமித்து வைக்கப்பட்டுள்ள அறை. இதிலிருந்து தான் தொழிலாளருக்குக் கருவிகள் வழங்கப்படும். பணிச் சாதனங்கள்