681
அடக்கம் போதிய அளவுக்கு அதிகமாகக் கனமாக பூசினால். வெப்பம் அதிகமாக இருந்தால், காற்றில் ஈரப்பசை மிகுதியாக இருந்தால் அல்லது பரப்பின்மீது நீட்சித் தன்மை கொண்ட பிலிமை பரப்பினால் சுருக்கம் விழும் அல்லது பெயின்ட், வார்னிஷ் திரண்டு நிற்கும்
wrist pin : (எந்.) இருசுக் கடையாணி : ஓர் இணைப்புச் சலாகையை ஏற்கும் ஒரு பிணைப்பூசி அல்லது உந்துமுனைப் பிணைப்பூசி.பொதுவாக ஒரு கேசோலின் எஞ்சினில் உந்து தண்டுடன் சலாகையை இணைக்கும் பிணைப்பூசி
wrong font : (அச்சு.) தவறான பான்ட் : அச்சுக்கோக்கப்பட்ட வாசகத்தால் இதர எழுத்துகளிலிருந்து வித்தியாசமாக உள்ள வேறு அளவிலான எழுத்து
wrong side : தவறான பக்கம் : கம்பி வலை கொண்டு தயாரிக்கப்பட்ட காகிதத்தில் கம்பி வலைமீது அமைந்த புறத்தில் அடையாளம் இருக்கும். இது தவறான பக்கமாகும்
wrought iron : (உலோ.) தேனிரும்பு : இரும்பிலுள்ள கார்பனும் மாசுப் பொருட்களும் முற்றிலுமாக அகற்றப்பட்ட தூய்மையான இரும்பு