93
binary theory : இருமூலகக் கோட்பாடு : எல்லா வேதியியல் பொருள்களும் எதிரெதிர்ப் பண்புகளுடைய இரு மூலப்பொருள்களால் ஆனவை என்னும் கொள்கை
binary alloys : (உலோ.) ஈரினை உலோகக் கலவைகள் : இரண்டு உலோகங்களை மட்டுமே கொண்ட உலோகக்கலவை
binary digits : (கணி.) ஈரிலக்க எண்கள் : எண் கணிமிகளில் பயன்படுத்தப்படும் முழு எண்கள்
binaural : இருசெவிக்கருவி : இரு செவிகளையும் சார்ந்த கருவி. மருத்துவர்கள் பயன்படுத்தும் இதயத் துடிப்பு மானியில் ஒவ்வொரு செவியாலும் கேட்பதற்கான இரு குழல்கள் உள்ளன
binder : (வார்.) கடுங்கட்டு : உள்மையப்பகுதிக்கு வலுவூட்டுவதற்காக உள்மைய மணலைக் கட்டிறுக்குவதற்குப் பயன்படுத்தப்படும் ஒரு பொருள். இதில் ஆளி விதை எண்ணெய், கருப்பஞ்சாறு, மற்றும் பல வாணிகத் தயாரிப்புகள் பயன்படுத்தப்படுகின்றன
binders board : நூல் கட்டுமான அட்டை : கலவைக் காகிதங்களாலான கனமான அட்டை. புத்தகங்களைக் கட்டுமானம் செய்து அட்டையாக இணைக்கப் பயன்படுகிறது
bindery : நூல் கட்டுமானச் சாலை : புத்தகங்கள், மடக்கு அறிக்கைகள், துண்டு வெளியீடுகள் போன்றவற்றை ஒருங்கிணைத்துக் கட்டுமானம் செய்யும் இடம்
binding post : கட்டுமான முளை :
(1) காகிதத்தில் துளைகள் வழியாகச் செலுத்தி தனித்தனித் தாள்களை கட்டிணைக்கப் பயன்படும் உலோகத்திலான முளை
(2) மின்கம்பியைப் பிணைப்பதற்கு ஒரு திருகுடன் கூடிய ஒர்உலோக முளை
binoculars : இரட்டை தொலை நோக்காடி : இரு கண்களாலும் நோக்குவதற்கேற்ற இரட்டைத் தொலை நோக்காடி
bio chemistry : உயிர் வேதியியல் : உயிரினங்களின் உடலில் ஏற்படும் வேதியியல் இயக்கங்களையும் அவற்றின் விளைவுகளையும் பற்றி ஆராயும் துறை
bioastronautics : (விண்.) உயிர்விண்வெளியியல் : விண்வெளிப் பயணத்தின்போது விலங்குகள் அல்லது தாவரங்கள் மீது ஏற்படும் விளைவுகள் பற்றி ஆராயும் அறிவியல்
biological control : (உயி.) உயிரியல் கட்டுப்பாடு : தீங்கிழைக்கும் நுண்மங்களின் எதிர் நுண்ம்ங்களைப் பெருக்குவதன் மூலம் இயற்கைக் கோளாறுகளைக் கட்டுப் படுத்தும்முறை. எடுத்துக்காட்டு : களைகளைக் கட்டுப்படுத்த பூச்சிகளைப் பயன்படுத்துதல்
biological shield : (உயி.) உயரியல் காப்பு : அணு உலை போன்ற அணுவியல் எந்திரங்களில் பணியாற்றும் ஆட்களை அணுக்கதிர் ஆதாரமுடைய ஒரு வட்டப் பாதுகாப்புச் சுவரை அமைத்தல்
biological shield : உயரியல் காப்பு : அணு உலை போன்ற அணுவியல் எந்திரங்களில் பணியாற்றும் ஆட்களை அணுக்கதிர் ஆதாரமுடைய ஒரு வட்டப் பாதுகாப்புச் சுவரை அமைத்தல்
biological warfore : (உயி.) உயிரியல் போர்முறை : நோய்களை உண்டாக்கும் நுண்ம்ங்களைப் பயன்படுத்தும் போர்முறை
bionics : (விண்.) ஒப்பு உயிரியல் : உயிர் மண்டலங்களைப் போன்று