பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

92

செலுத்தப்படும் நேர் மின்னோட்டம்

bib : (கம்.) திறப்புக் குழாய் : மீடாவின் திறப்படைப்புக் குழாய்

bible paper : (தாள்.) திருமறைத் தாள் : மெல்லியதான, ஒளி ஊடுருவிச் செல்லவிடாத, வலுவான ஒருவகைப் புத்தகத் தாள்.

bichloride of mercury : (வேதி.) பாதரச இருபாசகை : (H2Cl2) இதனை "இரசப்பாசிதை" என்றும் அழைப்பர். இது காயங்களைக் கழுவுவதற்கும், அறுவைச் சிகிச்சையிலும் நோய் நுண்மத் தடைப்பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. இது இரசங்கலந்த உறைப்பான கொடிய நஞ்சு. இதற்கு மாற்று மருந்து முட்டையின் வெண்கருவாகும்

bichromate of potassium : (வேதி.) பொட்டாசியப் பைக்ரோ மேட் (K2Cr2O7) ஒளிப்படக்கலை, நிலத்தில் வெண்கோடாக உருவப் படிவமுறும் ஒளிப்பட அச்சுமுறை ஆகியவற்றில் பயன்படும் செம்மஞ்சள் நிறப்படிகங்கள். பகுப்பாய்வு வேதியியலில் இது ஆக்சிகரணியாகப் பயன்படுகிறது

biennially : ஈரட்டையான : இரண்டு ஆண்டிற்கு ஒருமுறை நிகழ்கிற

bifilar coil : (மின்.) ஈரிழைச்சுருள் : ஒரு மின்கம்பிச் சுருளை ஒர் இரட்டைக் கம்பி கொண்டு சுருணை செய்யும் முறை. இதில் மின்னோட்டம் ஒரு திருப்பத்தில் 180° அளவில் இருக்கும். அடுத்த திருப்பத்தில் மின்னோட்ட நிலை இருக்காது. இதனால், மின்தூண்டல் நீங்கிவிடுகிறது

bilateral tolerance : இருபுறப் பொறுதி : அடிப்படை பரிணாமத்திற்கு உயர்வாக அல்லது தாழ்வாக உள்ள நுண் மட்டமைதி (உ-ம்) 5.250 ± .002 அங்

billet : (குழை.) உருளைப் பாளம் :

(1) ஒரு நீரழுத்த உந்து எந்திரத்தின் அழுத்தும் அறையில் வைக்கப்பட்டுள்ள நீள் உருளை வடிவான ஒரு பெரிய பாளம்

(2) எஃகு உருட்டு ஆலையின் இறுதியாக்கம் செய்த இரும்பின் சிறு சிறு துண்டுகளைத் தயாரிப்பதற்குப் பயன்படும் செவ்வக இரும்புச் சலாகை அல்லது துண்டு

billhead : (அச்சு.) முகப்புப்பட்டி : பெயர் முகவரி உடைய வாணிகக் குறிப்பு முகப்பு

billion : (1) இலட்சங்கோடி : ஆங்கில நாட்டு வழக்கில் இலட்சங் கோடி

(2) நூறுகோடி : அமக்ரிக்க, ஃபிரெஞ்சு நாடுகளின் வழக்கில் நூறுகோடி

bill of meterial : பொருட்பட்டி : சில இயக்கு முறைக்கு அல்லது எந்திரத்திற்குத் தேவைப்படும் உறுப்புகளையும், அளவுகளையும் கொண்ட ஒரு பட்டி

bimetalic element : (குளி.) இருமாழைக் கருவி : இரு மாறுபட்ட வெப்ப விரிவாக்கக் குணகங்களைக் கொண்ட, இரு உலோகங்களைக் கொண்ட வெப்பக்கட்டுப்பாட்டுச் சாதனம்

bimetal - thermostat : (தானி.) இருமாழை வெப்பச் சீர்நிலைக் கருவி : இருமாறுபட்ட உலோகத் துண்டுகளை ஒன்றாகப் பற்றவைத்து உருவாக்கிய சாதனம். சூடாக்கும்போது ஏற்றத் தாழ்வான விரிவாக்கம் ஏற்படுவதால் இச்சாதனம் வளைகிறது

binary : (மின்.) ஈரினை : 0, 1, என்ற இரு குறியீடுகளை மட்டுமே பயன்படுத்துகிற 2 ஆதாரத்தைக்கொண்ட ஒர் எண்மான முறை