பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
91

உடையதாக மாறுகிறது. அது பின்னர் பீட்டாத்துகள்களை அனுப்பி அடுத்த உயர்ந்த அணு எண்ணுடைய தனிமமாக மாறுகிறது. எடுத்துக்காட்டாக, யுரேனியம், இதே முறையில், யுரேனியத்தை விட அதிக அணு எடையுள்ள தனிமமாக மாறுகிறது

beton : (அச்சு.) பீட்டான் : ஜெர்மனியில் முதன்முதலில் தயாரிக்கப்பட்ட ஒருவகை அச்செழுத்துருவின் பெயர்

bevatron : (மின்.) எலெக்ட்ரான் மின்னழுத்தப் பெருக்கி : அணு மின்மங்களுக்கு நூறு கோடிக்கணக்கான மடங்கு ஆற்றல் பெருக்கும் அணு ஆற்றல். விசைவியக்க அமைவு

bevel : சாய்தளம் :

(1) ஒரு பரப்பின் பிற பகுதியுடன் செங்கோணத்தில் இல்லாத ஒரு பரப்பு சாய்வு 45° இருக்கும்போது உள்ள சாய்தளம். அது மிட்டர்' (Miter) எனப்படும்

(2) கோண அளவு கருவி : சாய் தளத்தின் கோணத்தை அளக்கும் கருவி. பாகை அளவுகளுடன் இணைந்திருக்கும்போது "சாய்நீளக் கோண்மானி' என அழைக்கப்படுகிறது

கோன அளவு கருவி

beveled rule : (அச்சு) சாய் கோண வரித்தகடு : அச்சுக்கலையில் முகப்பு ஒரு சாய்கோணப் பரப்பிலுள்ள ஒரு வரித்தகடு

beveled sticks : (அச்சு.) சாய் கோண அச்சுக்கோப்புக் கட்டை : அச்செழுத்துகளை அடுக்கும் நீண்ட தட்டில் அச்சுருக்களைப் பாதுகாப்பாக வைப்பதற்குப் பயன்படும் அச்சுருப்பற்றாப்புகள் அல்லது செருகு தண்டுகள் கொண்ட மரத்தாலான அல்லது உலோகத்தாலான கட்டை

bevel gaars : (பொறி.) சாய்வுப் பல்லினை : பற்கள் மட்டும் சாய்வாக இணைந்து ஒன்றை ஒன்று இயங்கும்படி அமைக்கப்பட்ட வேறு வேறு தளத்தில் சுழலும் சக்கர அமைவு

beveling in walding : சாய்வாக்கம் : பற்ற வைப்பதில், பற்றவைக்கும் உறுப்புகளின் முனைகளைத் தட்டையாக்குதல் அல்லது, தேய்த்துக் கூர்மையாக்குதல்

bevel protractor : சாய்தளக் கோணமானி : கோணங்களை அளவிடுவதற்குத் தக்கவாறு அமைத்துக் கொள்ளக்கூடிய ஒரு கருவி.

bevel washer : சாய்தள வளயம் : புரியுள்ள ஒரு தண்டினை ஒரு தூலத்தின் வழியாகச் செலுத்தப்படும்போது திருகாணிக்கு ஒரு தட்டையான தோற்றத்தைக் கொடுப்பதற்குக் கட்டுமானப்பணியில் பயன்படுத்தப்படும் ஒரு வளையம்

Bezel :(1) முகப்பு வளையம் : ஒரு கடிகாரத்தின் முகப்புக் கண்ணாடியைச் சுற்றியுள்ள ஓர் உலோக வளையம்

(2) சாய்பக்கம் : பட்டை தீட்டிய மணிக்கற்களின் சாய்பக்கம்

(3) தவாளிப்பு உளியின் வாயிலுள்ள தவாளிப்பு

bias volt : (மின்.) சார்பு மின்னழுத்தம் : ஒர் எலக்ட்ரான் குழலின் உட்பாட்டு மின்கம்பி வலைக்குள்