பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
97

விசிறியின் அலகு போன்ற ஒரு கருவியின் அல்லது சாதனத்தின் தட்டையான தீவிர இயக்கப் பகுதி.

blade angle : (வானூ.) அலகு முதுகு : ஒரு முற்செலுத்தும் சுழல் சிறியின் பக்கப்பகுதி. இது விமானத்தின் காற்றழுத்தத் தளத்தின் மேற்பரப்பிற்கு நரிணையாக இருக்கும்

blade back : (வானூ.) அலகுக் கோணம் : முற்செலுத்தும் சுழல் விசிறியின் அல்லது சுழல் இறகு அமைப்பின் ஆரத்திற்கும், சுழல் அச்சுக்குச் செங்குத்தான ஒரு சம தளத்திற்குமிடையிலான கூர்ங் கோணம்

blade face : (வானூ.) அலகு முகப்பு : விமானத்தின் காற்றழுத்தத் தளத்தின் கீழ்ப்பரப்பிற்கு நேரிணையாக இருக்கும் முற்செலுத்துச் சுழல் விசிறி அலகின் மேற்பரப்பு. இதனை அழுத்த முகப்பு அல்லது இயக்க முகப்பு என்றும் அழைப்பர்

blacksmith : கருமான்; கொல்லன் : உலோகங்களைக் காய்ச்சி அடித்து உருவாக்கும் கைவினைஞர்

blacksmith drills : கருமான் துரப்பணம் : 1.27 செ.மீ. விட்டமுடைய, சாய்வுத்திருகுக்கான ஒரு சமதளத்தைக் கொண்டு ஒர் எந்திரத் தண்டின் மூலம் செய்யப்படும் துரப்பணம்

black spruce : (மர.) கரும் ஊசியிலை மரம் : இது எடை குறைந்தது; சிவப்பு வண்ணம் உடையது; இதன் இழை கடினமானதாயினும் வேலைப்பாடு செய்ய எளிமையானது. இது அமெரிக்காவின் வடமாநிலங்களிலும், கனடாவிலும் காணப்படுகிறது

black varnish : கரும் அவலரக்கு : புகைக்கரியிலிருந்து செய்யப்படும் கருவண்ணம் சேர்க்கப்பட்ட சாதாரண அவலரக்கு. இது தோரணிகள் செய்பவர்களுக்குப் பயன்படுகிறது

black walnut : (மர.) கரு வாதுமை மரம் : இது கனமானது; கடினமானது. நுண்துளைகளுடையது; பழுப்பு நிறம் வாய்ந்தது, சிறு மரப்பெட்டிகள், துப்பாக்கிச் சட்டங்கள் செய்யவும், உட்பகுதி அலங்கார வேலைப்பாடுகளுக்கும் பயன்படுகிறது

blade-width ratio : (வானூ.) அலகு-அகல விகிதம் : எந்த ஒரு புள்ளியிலும் முற்செலுத்துச் சுழல் விசிறியின் அலகின் முழு அகலத்திற்கும், அந்தச் சுழல் விசிறியின் அச்சிலிருந்து அந்தப் புள்ளிக்கு உள்ள தூரத்தை ஆரமாகக் கொண்ட ஒருவட்டத்தின் சுற்றளவுக்கும் இடையிலான விகிதம்

blanc fixe : வெண்காடி : இது பேரியம் சல்ஃபேட்டு ஆகும். இது வண்ணங்கள் தயாரிக்கப் பயன்படுகிறது. பாரைட்ஸ் என்ற தாதுப் பொருளை நுண்ணிய தூளாக்கி இது தயாரிக்கப்படுகிறது. இது செயற்கையாகத் தயாரிக்கப்படும் போது இதன் நிறமி மிக நேர்த்தியாக இருக்கும். இதுவே 'வெண்காடி' என் அழைக்கப்படுகிறது

blanch : (குளி.) வெண்மையாக்கம் : புட்டியிலடைக்கப்படும் சில வகைக் காய்கறிகளைச் சூடான நீரில் அமிழ்த்திக் கிருமி நீக்கம் செய்தல்

bland fluids : பானத்திரவம் : வயிற்றுக்கு எரிச்சலுண்டாக்காத பால், பார்லி நீர் போன்ற பானங்கள்

blank : தட்டைத் தகடு : தட்டை உலோகத் தகட்டிலிருந்து வெட்டி எடுக்கப்படும் துண்டு எந்த ஒரு வடிவத்தையும் அமைப்பதற்கு