பக்கம்:அறிவியல் அகராதி.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

gen

179

gen

குறிப்பிட்ட வகையின் எல்லா மரபுச் செய்தியும் இருக்கும். (உயி)

gene pool - மரபணுச் சேமகம்: ஒரு குறிப்பிட்ட உயிர்த்தொகுதியின் எல்லா மரபணுக்களின் தொகு மொத்தம் (உயி)

generative cell - பிறப்பணு : விதையுறை இல்லாத் தாவரங்களின் மகரந்த மணியின் அணு. இது பிரிந்து காம்பணுவையும் உடலணுவையும் உண்டாக்குதல், (உயி)

generative nucleus-பிறப்புட்கரு: முளைத்து வரும் மகரந்தக் குழலின் மேலே உள்ள பகுதி. இது பிரிந்து இரு பாலணுக்களை உண்டாக்கும். இவையே சூல்பையை அடைந்து இணைந்து கருவுறுதலுக்குக் காரணமாக உள்ளன. tube nedeus. (உயி)

Generator- மின்பிறப்பி: மின் இயற்றி எந்திர ஆற்றலை மின்னாற்றலாக்கும் பெரிய எந்திரம். சிறியது மின்னியக்கி (டைனமோ) (இய)

gene revolution - மரபணுப்புரட்சி: மரபாக்கம் மூலம் வேளாண்மை, மருத்துவம் முதலிய துறைகளில் அமைதியாக நடை பெற்று வரும் முன்னேற்றம் (உயி)

genesis - தோற்றம், பிறப்பு, ஆக்கம்: உயிர்வகை அல்லது தொகுதியின் தோற்றம். இதில் உயிரணு, திசு, உறுப்பு முதலியன வும் அடங்கும். (உயி)

gene splicing - மரபணுப்பிணைவு: ஒரு மரபணு மற்றொரு மரபணுவுடன் நொதி மூலம் இணைதல் (உயி)

gene therapy - மரபணுப்பண்டுவம்: மரபணுக்குறை நீக்கம். குறைபாடுள்ள மரபணுக்களை மரபணுவாக்க நுணுக்கங்கள் மூலம் மாற்றியமைத்தல். ஆய்வு நிலையில் உள்ளது. இறுதியான நோக்கம் மரபணு நோய்களைப் போக்குவதே. (உயி)

genetic code-மரபுக் குறியம்: ஒரு தலைமுறையிலிருந்து மற்றொரு தலைமுறைக்கு மரபுவழிப் பண்புகள் செல்வதைப் பற்றிய நெறிப்பாடு. உயிரணு நிறப்புரியின் மூலக்கூறு அமைப்பினால், இது வெளிப்படுகிறது. (உயி)

genetic complex - மரபுக்கலவை: அணுக்கணியத்திலும் நிறப்புரிகளிலும் அமைந்துள்ள மரபுக் காரணிகளின் தொகுமொத்தம். (உயி)

genetic drift - மரபணு மிதப்பு: உட்பெருக்கம் நடைபெறும் சிறு உயிர்த் தொகுதிகளில் காணப்படும் போக்கு வேற்றக மரபணு இணைகள், ஒர் இனை மாற்றுக்கு (அலீல்) அல்லது மற்றொன்றிற்கு ஒரக இணைகளாதல். வாய்ப்பாக நிகழ்வது. தேர்வாக அன்று. (உயி)

genetic engineering - மரபணுவாக்கம்: இது 1977 வாக்கில் தோன்றிய புதிய அறிவியல் துறை. 24 ஆண்டு வரலாறுடையது. இது ஒரு தொழில் நுணுக்-