பக்கம்:அறிவியல் அகராதி.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

iod

223

iro



உறுப்பு அளவில் குறைதல். மூப்படைதல் ஒரு காரணம். விரிதல் மற்றொரு காரணம். கருப்பேற்றுக்குப் பின் கருப்பை சுருங்கல், 2. கருக்கோளத் துளையின் முதுகுப்புற (மேல்) உதடு உள்திரும்பல். 3. பாதகச் சூழ்நிலைகளில் நுண்ணுயிரிகளின் பிறழ்வடிவங்கள் உண்டாதல், ஓ. implosion, invagination. (உயி)

iodate - அயோடேட்டு: அயோடியக் காடியின் உப்பு (வேதி)

iodic acid-அயோடிகக்காடி: நீரில் கரையக்கூடிய நிறமற்ற பொருள். ஆல்ககாலில் கரையாது. நைட்ரிகக் காடியுடன் அயோடினைச் சேர்த்து உயிர்வளி ஏற்றம் செய்து இதனைப் பெறலாம். ஆற்றல் வாய்ந்த உயிர்வளி ஏற்றி. (வேதி)

iodide - அயோடைடு: அயோடினின் இருதனிமச் சேர்மம். (வேதி)

iodine - அயோடின்: I பளபளப்பான கருநிற ஊதாப் படிகம். சூடாக்க ஊதா நிற ஆவியைக் கொடுக்கும். நீரில் அரிதாகக் கரையும். ஆல்ககாலில் நன்கு கரையும். இக்கரைசல் அயோடின் கறையம் (டிங்சர் ஆஃப் அயோடின்) ஆகும். வேதிப்பகுப்பிலும் மருத்துவத்திலும் புகைப் படக் கலையிலும் பயன்படல். உணவில் அயோடின் ஊட்டங் குறையுமானால் தொண்டைக் கழலை உண்டாகும். (வேதி)

iodoform - அயோடபார்ம்: அயோடின் சேர்மம் எலுமிச்சை மஞ்சள் நிறப்படிகம். குங்கும மணம் புரைத்தடுப்பான். (வேதி)

ion - அயனி: மின்னணு இழப்பு அல்லது ஏற்பினால் உண்டாகும் மின்னேற்றத் துகள் (அணு) (இய)

ionisation -அயனியாக்கள்; ஓர் அணுவிலிருந்து மின்னணுக்களை நீக்கல் அல்லது அணுவோடு அவற்றைச் சேர்த்தல். இதனைப் பலமுறைகளில் செய்யலாம். (இய)

ionosphere - அயனிவெளி: காற்று மேல் வெளி மின்காந்த அலைகளை மறித்து, வானொலிச் செலுத்துகை நடைபெற உதவுவது (இய)

iridium - இரிடியம்: Ir அரிய உலோகம். பிளாட்டினத்தை ஒத்தது. அதனோடு சேர்ந்து கிடைப்பது. மிகக் கடினமானது. வேதிவினைக்குத் தடை அளிப் பது. மூசைகள் செய்யவும் மையூறி முட்கள் செய்யவும் பயன்படுதல். (வேதி)

iris-கருவிழிப்படலம்: விழியடிக் கருப்படலத்தின் முன்பகுதி ஒளி உள்ளே செல்வதைக் கட்டுப்படுத்துவது. (உயி)

iron-இரும்பு: Fe. மூன்று படிக வடிவங்களில் கிடைக்கும் வெண்ணிறக் காந்த உலோகம், ஆல்பா இரும்பு, காமா இரும்பு, டெல்டா இரும்பு ஆகியவை அவ்வடிவங்கள். ஊதுலையில் அதன் தாதுவிலிருந்து பிரித்து எடுக்கப்படுதல். (வேதி)