பக்கம்:அறிவியல் அகராதி.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

alu

21

amm


பது. உலைகளுக்குக் கரை அமைக்கவும் உருக்கற்கள் செய்யவும் பயன்படுகிறது. (வேதி)

aluminium - அலுமினியம்: Al எடை குறைவான வெள்ளி போன்ற உலோகம் வானூர்தித் தொழில், தானியங்கித் தொழில் ஆகியவற்றில் முதன்மையாகப் பயன்படுவது. (வேதி)

aluminium bronze - அலுமினிய வெண்கலம்: உலோகக் கலவை, சிலைகள், நாணயங்கள், சமையல் பாண்டங்கள் முதலியவை செய்யப் பயன்படுவது. (இய)

aluminium paint - அலுமினிய வண்ணக் குழைவு: அலுமினிய நிறமியைப் பூசெண்ணெயில் கலந்து தயாரிக்கப்படுவது. கதிர்வீச்சை மறித்து வெப்பக் காற்றிலும் தொட்டிகளிலும் வெப்பத்தை நிலைநிறுத்துவது. (வேதி)

aluminium paste - அலுமினியப் பசை: நன்கு நுணுக்கிய அலுமினியத் தூளை எண்ணெயில் கலந்து இப்பசை செய்யப்படுகிறது. அலுமினிய வண்ணங்களில் பயன்படுவது. (வேதி)

aluminium soap - அலுமினியச் சவர்க்காரம்: உயர் கார்பாக்சிலிகக் காடி, அலுமினியம் ஆகியவற்றின் உப்ப. நீரில் கரையாது. எண்ணெயில் கரையும். மசை, வண்ணங்கள், பூசசெண்ணெய் ஆகியவற்றில் பயன்படுகிறது. (வேதி)

alveolus - 1 பற்குழி பல்லில் உள்ள குழி. 2. மூச்சுச்சிற்றறை துரையீரலில் உள்ள சிறிய அறைகள். (உயி)

amalgam - இரசக் கலவை: இரும்பு தவிர்த்த ஏனைய உலோகங்களோடு பாதரசம் சேரும் பொழுது உண்டாகும் கலவை. (வேதி)

amber - நிமிளை: மஞ்சள் நிறப் படிவ உயிர்ப்பிசின். அணிகலன்களில்பயன்படுவது. (வேதி)

americium - அமெரிசியம்: Am அதிக நச்சுத் தன்மையுள்ள கதிரியக்கத் தனிமம். (வேதி)

amino acids - அமினோ காடிகள்: இன்றியமையா வேதிப்பொருட்கள். கார்பாக்சிலிக் காடிகளின் வழிப் பொருள்கள். இவை எண்ணிக்கையில் 20. பயன் மிகுந்தவை 10. பயன் குறைந்தவை 10. (வேதி)

amino aciduria - அமினோ நீரிழிவு: அமினோகாடி குறைபாடு. இது ஒரு நோய். (மரு)

amitosis - நேர்முகப் பிரிவு: கண்ணறைப் பிரிவில் உட்கரு நேரடியாகப் பிளவுறுதல். ஒ. mitosis. (உயி)

ammeter - மின்னோட்டமானி: மின்னோட்டத்தை அளக்குங் கருவி. (இய)

ammonal - அம்மோனல்: அம்மோனியம் நைட்ரேட், தூள் அலுமினியம், முந்நைட்ரோடுலின் (டி.என்.டி) ஆகிய மூன்றும் சேர்ந்த கலவை, வெடிமருந்து. (வேதி)