பக்கம்:அறிவியல் அகராதி.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

kar

229

kep


கலவி இனப்பெருக்கத்தின்போது, ஒவ்வொரு பெற்றோரிடமிருந்து வரும் இரு உட்கருக்கள் இணைதல். இதனால் கருவணு உட்கரு உண்டாதல். (உயி)

karyokinesis - உட்கருப்பிரிப்பு: உயிரணுப் பிரிவின்போது உட்கரு பிரிந்து பல சிக்கலான மாற்றங்களைப் பெறுதல். (உயி)

karyolymph - உட்கருநீர்: உட்கருக் கணியத்தின் வலைப் பின்னலிலுள்ள பதிபொருள். (உயி)

karyotype - உட்கருவகை: அளவு, வடிவம், பிரிநிறப்புரியின் எண்ணிக்கை ஆகியவற்றால் வரையறை செய்யப்படும் உட்கருப் பண்பு. (உயி)

Katers pendulum - கேட்டர் ஊசல்: ஹென்றிகேட்டர் (1777-1835) வடிவமைத்த அரிய ஊசல், தடையிலா வீழ்ச்சியின் முடுக்கத்தை அளக்கப் பயன்படுவது. (இய)

katharometer - கடத்துதிறனறி மானி: வெப்பங்கடத்தும் திறனை அளந்தறியப் பயன்படுங்கருவி. குறிப்பாக, வளி நிறவரைவியலில் கண்டறியும் கருவி. (இய)

k-band - கே வரிசை: வானொலி அதிர்வெண் வரிசை. எல்லை 10,900 - 36,000 மெகா ஹெர்ட்ஸ். (இய)

keel - படகல்லி: அவரையின் அல்லி. அவரை முதலிய பூக்களில் சமமற்ற 5 அல்லிகள் இருக்கும். இவற்றில் மிகப் பெரிய தனித்த அல்லி கொடியல்வி (ஸ்டாண்டர்ட் பெட்டல்). இது பக்கவாட்டில் காம்புள்ளவையும் சிறியவையுமான இரு அல்லிகளைத் தன்னகத்தே கொண்டி ருக்கும். இவற்றிற்குச் சிறகல்லிகள் (விங்பெட்டல்ஸ்) என்று பெயர். இவை மற்றும் இரு அல்லிகளைத் தம்முள் அடக்கி இருக்கும். இவை படகு வடிவத்தில் இருப்பதால் படகல்லிகள் (கீல்பெட்டல்ஸ்) என்று பெயர். (உயி)

keel - படகுநீட்சி: பறவை, வெளவால் ஆகியவற்றின் மார்பெலும்பின் அடிப்பகுதியில் காணப்படும் மெலிந்த நீட்சி. (உயி)

keepers - காப்பிகள்: நிலையான காந்த முனைகளுக்கிடையே வைக்கப்படும் தேனிரும்புத் துண்டுகள். இவை காந்த ஆற்றல் நிலைத்திருக்கப் பயன்படுபவை. (இய)

kelvin - கெல்வின்: k வெப்ப இயக்கவியல் வெப்பநிலையின் எஸ்ஐ அடிப்படை அலகு சுழி கெல்வின் என்பது முழுச்சுழி ஆகும். (இய)

Kepler's laws - கெப்ளர் விதிகள்: 1. கோள்கள் யாவும் ஒரு குவியத்திலமைந்த நீள்வட்ட வழிகளில் கதிரவனை வலம் வருகின்றன. 2. கதிரவனையும் கோளையும் சேர்க்கும் ஆரக்கோடு, கதிரவனைக் கோள் சுற்றும்போது, சம அளவு நேரத்தில் சம