பக்கம்:அறிவியல் அகராதி.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

law

238

lea


laws of thermodynamics - வெப்ப இயக்கவியல் விதிகள்: 1. வெப்பமும் வேலையும் ஒன்றி விருந்து மற்றொன்றாக மாற்றப் படக் கூடியவை, உண்டாகும் வெப்பம் (H) செய்யப்பட்ட வேலைக்கு (W) நேர்வீதத்தில் இருக்கும். W α H, 2 i) சுற்றுப் புறத்தைவிடக் குறைவாக ஒரு பொருளைக் குளிர்விப்பதன் மூலம், அதிலிருந்து தொடர்ந்து ஆற்றலைப் பெற இயலாது - கெல்வின். (ii) வெளி உதவி யின்றித் தானாக இயங்கும் எந்திரத்தினால், குறைந்த வெப்ப நிலையிலுள்ள பொருளி லிருந்து வெப்பத்தைப் பெற்று அதிக வெப்பநிலையிலுள்ள பொருளு க்கு அதனை அளிக்க இயலாது - கிளசியஸ். layering-பதியம் போடுதல்:- இனப் பெருக்க முறைகளில் ஒன்று ரோஜா (உயி) பா. vegetative propagation.

layout - திட்டவரை: 1. ஒரு சுற்று வழியை வடிவமைக்கப் பயன் படுந்திட்டம் 2. ஒரு திட்டத்திற்கு வரையப்படும் அமைப்புப் படம். leaching - ஊறித்தல்: நீர்மக்கசிவு. கரைபொருளைக் கரைப்பானைக் கொண்டு வெளுத்தல்.(உயி)

lead - காரீயம்: Pb. 1. மென்மை யான நீலச்சாயல் கொண் ட வெண்ணிற உலோகம். நிலக்கரி யைச் சேர்த்து, வறுத்த தாதுவை ஒடுக்க இப்பொருள் கிடைக்கும். எல்லா வீறுள்ள காடிகளோடுஞ்சேரும். மின்கல அடுக்குகள். கம்பிகள், நிறமிகள் முதலியவை செய்யப் பயன்படுவது. இது பல உப்புக்களையும் கொடுக்க வல்லது. 2. கம்பி. lead chamber process - காரீய அறைமுறை: பெருமளவில் காந்தகக் காடி தயாரிக்கும் முறை (வேதி)

leaf இலை: காம்புடன் கூடிய தண்டின் பக்கப் புற வளர்ச்சி. விரிந்த பரப்பு அல்லது தாளு டையது. இப்பரப்பில் பல நரம்பு கள் பின்னியுள்ளன. தாவரத்தின் தொழிற்சாலை (உயி)

leaf area index - இலை பரப் பெண்: (உயி)

leaf canopy - இலைவிரிகுடை: ஒரு தாவரத்தின் மொத்த இலைத் தொகுதிப்பரவல். மரத்தின் இலைத் தொகுதி விரிந்து குடை போன்று அமைந்திருத்தல். (உயி)

leaf curl - இலைச்சுருளல்: தாவர நோய், இலை சுருண்டும் சுருக் கங்களுடனும் இருத்தல். (உயி)

leaf fall - இலை உதிர்தல்: தாவர இலைக்காம்படியில் பிரி மண்ட லம் உண்டாவதால், இலைகள் விழுதல். (உயி)

leaf insect-இலைப்பூச்சி: தட்டை யான இலையொத்த தோற்ற முடைய பூச்சி. (உயி)

leaf margin - இலைவிளிம்பு: (உயி)

leaf miner - இலைவாழ் உயிரி: இலையின் இரு புறத்தோல் களுக்குமிடையே உள்ள கண்ண