பக்கம்:அறிவியல் அகராதி.pdf/252

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

LSD

250

Lye


LSD lysergic acid diethylamide- எல்எஸ்டி, லைசர்சிக்காடி இரு எத்திலமைடு உளக்கோளாறு உண்டாக்கும் மருந்து. மன மயக்கத்தையும் தடுமாற்றத்தையும் தருவது. இளைஞர்கள் இக்கொடிய பழக்கத்திற்கு அடிமைகள்.(வேதி)

lubricants - உயவுப்பொருள்கள். மசகுப் பொருள்கள் ஒன்றின்மீது மற்றொன்று இயங்கும் இருபுறப் பரப்புகளுக்கிடையே உண்டாகும் உராய்வையும் தேய்மானத்தையும் குறைக்கும் பொருள். எ-டு. மசகு, கிராபைட்டு வகை. 1. திண்ம உயவுப் பொருள்கள்: மசகு, சவர்க்காரக் கல் 2. நீர்ம உயவுப் பொருள்கள்: கனிம, கரிம எண்ணெய் பயன்கள் . உராய்வினால் ஏற்படும் ஆற்றலிழப்பு தடுக்கப்படுதல். 2. எந்திர வேலைத்திறன் உயர்தல். 3. துருப்பிடித்தல், அரிமானம் ஆகியவை தவிர்க்கப்படுதல். உயவுப் பொருளைச் சேர்த்தலுக்கு உயவிடல் என்று பெயர்.

lubrication -உயவிடல்: பா. lubricants (வேதி)

luciferase - லூசிபெரேஸ்: உயிர் வளி ஏற்றி நொதி மின்மினிகளின் ஒளியை உண்டாக்குவது. புரதம் போன்ற பொருள் லூசிபெரின். இஃது இப்பூச்சிகளின் ஒளி உறுப்புகளில் இருப்பது. (உயி)

lumbar vertebrae -இடுப்பு முள் எலும்புகள்: மார்புப்பகுதிக்குப் பின்னுள்ள முள் எலும்புகள். பா.(உயி)

luminiscene -ஒளிர்வு, இருட்டில் உண்டாகும் ஒளி உயிரணுக்களில் ஏற்படும் வேதி மாற்றங்களால் உண்டாவது, எ-டு. கடல்வாழ் முதல் தோன்றிகள் (புரோட்டோ சோவா (உயி)

luminious paint -ஒளிர்வண்ணக் குழைவு: ஒளிர்வுள்ள கரிமச் சேர்மங்களிலிருந்து கால்சியம் சல்பைடு) செய்யப்படும் பூச்சு. ஒளிபட ஒளிரும். (வேதி)

lungs- நுரையீரல்கள்: காற்றினால் மூச்சுவிடும் உயிர்களுக்குள்ள மூச்சுறுப்புகள். பொதுவாக இரண்டு. மூச்சுக்குழல், கிளைக் குழல் ஆகியவற்றைக் கொண்டது. மூச்சுச் சிற்றறைகள் இவற்றின் இறுதிப்பகுதிகள். இவற்றில் வளிமாற்றம் நடைபெறுதல்.(உயி)

lute-கொழுமண்: காரை அல்லது களிமண் துளைப்பகுதியின் மீது பூசப் பயன்படுவது. இதனால் உள்ளே காற்று அல்லது நீர் செல்ல இயலாது. (வேதி)

Lux - லக்ஸ்: அலகுச்சொல். ஒளித்திறன் (எஸ்.ஐ) வழியலகு (=1 லூமன் / ச.மீ) (இய)

luxation - 1.கழிவகலல்: உணவு வழியிலிருந்து கழிவுப் பொருள் எளிதாக வெளியேறுதல், 2.மூட்டு நழுவல். (உயி)

lye - காரக்கரைசல்: சோடியம் அல்லது பொட்டாசியம் அய்டிராக்சைடு கரைசல், கழுவப்