பக்கம்:அறிவியல் அகராதி.pdf/293

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

nit

291

nit


 படுவினைக்கு உட்படுத்திப்பெறலாம். கரைப்பான். உயிர்வளிஏற்றி, அனிலைன், தரைமெருகேற்றிகள் முதலியவை செய்யப்பயன்படுதல். (வேதி)

nitrocellulose - நைட்ரோ செல்லுலோஸ்: பஞ்சு போன்ற திண்மம். 10-14% நைட்ரஜன் உண்டு. ஏவுகணை இயக்கி, வெடிமருந்துகள், விரைந்துலரும் கரைப்பான்கள் செய்யப்பயன்படுதல். (வேதி)

nitrogen - நைட்ரஜன், வெடிவளி (வெடியம்): N. நிறமற்றது. சுவையற்றது. மணமற்றது. வளி நிலையில் உள்ளது. தனி நிலை நைட்ரஜனாகக் காற்றில் நிரம்ப உள்ளது. (4000 மில்லியன் டன்கள்). தாவர விலங்கு வாழ்க்கைக்கு மிக இன்றியமையாதது. அம்மோனியா, நைட்டிரிகக்காடி, நைட்டிரைடுகள் முதலியவை உண்டாக்கப் பயன்படுதல். (வேதி)

nitrogen balance - நைட்ரஜன் சமநிலை: இதனை நைட்ரஜன் நடுநிலை என்றும் கூறலாம். ஒர் உயிரி நைட்ரஜனை உட்கொள்வதற்கும் வெளியேற்றுவதற்கும் இடையே உள்ள வேறுபாடு. வளருங் குழந்தைகளிடத்து இது நேர்க்குறி(+), நோயாளிகளிடத்து எதிர்க்குறி(-). (உயி)

nitrogen cycle - நைட்ரஜன் (வெடி வளிச்) சுழற்சி: இதனை நைட்ரஜன் வட்டம் என்றுங்கூறலாம். கனிமப் பொருள், கரிமப்பொருள் ஆகிய இரண்டின் வழியாக மட்டுமே நைட்ரஜன் உயிரிகளின் உடலுக்குள் செல்லக்கூடியது. நைட்ரஜனைத் தக்கவைக்கும் குச்சியங்கள் (பாக்டீரியா) காற்றுவெளி நைட்ரஜனை நிலைப் புடுத்துகின்றன. இந்த வளியைத் தாவரங்கள், உறிஞ்சிப் புரதம் தொகுக்கின்றன. இதை விலங்குகள் உட்கொள்ளும் பொழுது, அது விலங்குப் புரதமாகின்றது. இறுதியாகத் தாவரங்களும், விலங்குகளும் மடிகின்றபொழுது, அவை எளிய நைட்ரஜன் ஊட்டமுள்ள சேர்மங்களாகச் சிதைகின்றன. நிலக்கரி, மரம் ஆகியவை எரிக்கப்படும் போதும், நைட்ரஜன் காற்று வெளிக்குச் செல்கின்றது. ஆக, உயிர்த் தொகுதிகள் மூலம் நைட்ரஜன் மீண்டும் மீண்டும் சுழல்கிறது. இவ்வாறு பலநிலைகளில் தாவரங்களுக்குக் காற்று வெளி நைட்ரஜன் செல்லுதலும், தாவரங்கள் விலங்குகள் ஆகியவற்றிலிருந்து மீண்டும் நைட்ரஜன் காற்று வெளிக்குச் செல்லுதலுமே நைட்ரஜன் சுழற்சியாகும். இயற்கை நன்கொடைகளில் இதுவும் ஒன்று. (உயி)

nitrogen fixation - நைட்ரஜனை நிலைப்படுத்துதல்: நைட்ரஜன் சேர்மங்களாகக் காற்றுவெளி நைட்ரஜன் மாற்றப்படும் வினை. பா. nítrogen cycle. (வேதி)

nitroglycerine - நைட்ரோ கிளைசரின்: நிறமற்றது. நச்சுத் தன்மை யுள்ளது. எண்ணெய் போன்ற