பக்கம்:அறிவியல் அகராதி.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

aqa

32

arg


aqua mirabilis - வியப்பு நீர்மம்ː இஞ்சி, சாதிக்காய் முதலியவற்றிலிருந்து பெறப்படும் வடித்தெடுப்பு. (வேதி)

aqua regia - அரச நீர்மம்: அடர் அய்டிரோ குளோரிகக்காடியும், அடர் நைட்டிரிகக் காடியும் 3:1 என்னும் வீதத்தில் சேர்ந்த கலவை. அதிக அரிப்புத் தன்மை உடையதால் பொன், பிளாட்டினம் ஆகிய உலோகங்களைக் கரைக்கப் பயன்படுகிறது. (வேதி)

aquarium - நீருயிர் வளர்ப்பகம்: தொட்டிகளில் நீர் ஊற்றி அவற்றில் நீர்வாழ் தாவரங்கள் அல்லது விலங்குகள் வளர்க்கப்படுதல். அறிவியல் பயிற்றுவதில் முதல்நிலை அறிவை அளிப்பதால் கல்வித் திட்டத்தில் சிறப்பிடம் பெறுவது. (உயி)

aqueous humour - கண் முன்நீர்: கண்ணில் விழிவெளிப்படலத்திற்கும் ஒளி வில்லைக்கும் இடையே உள்ள நீர். ஒளிக்கதிர் செல்லப் பயன்படுதல். ஒ. vitreous humour. (உயி)

arabinose - அராபினோக்ஸ் C5H10O5: நீரில் கரையக்கூடிய வெண்ணிறப் படிகம். ஐஞ்சர்க்கரை, கோந்துகளிலிருந்து பெறப்படுதல் அல்லது குளுகோசிலிருந்து பெறப்படுதல் அல்லது குளுகோசிலிருந்து செயற்கையாக உண்டாக்கல். குச்சிய இயலில் வளர்ப்புக் கரைசல். (வேதி)

arachnida - சிலந்தியங்கள்: கணுக்காலியின் ஒரு வகுப்பு. இதில் தேள், சிலந்தி முதலியவை அடங்கும்.

arachnoid membrane - சிலந்திப் படலம். பா. meninges. (உயி)

araeometer - ஒப்படர்த்திமானி: ஒப்படர்த்தியை அளக்கப் பயன்படுங் கருவி. இது ஒரு நீர் மானியே. (இய)

archaeopteryx - ஆர்க்கியாப்டிரிக்ஸ்: அழிந்தொழிந்த புதை படிவப் பறவை. ஊர்வனவற்றிற்கும் பறவைகளுக்கும் இணைப்பாக அமைவது. (உயி)

archegonium - பெண்ணியம்: பெரணிகளிலும் மாசிகளிலுமுள்ள பெண்ணுறுப்பு. ஒ. antheridium. (உயி)

Archimedes' principle - ஆர்க்கிமெடிஸ் நெறிமுறைː பா. buoyancy. (இய)

archiplasm - மூலக்கணியம்: விண்மீன் வடிவிகளையும் கதிர்களை யும் உண்டாக்கும் தனிச் சிறப்புடைய பொருள். இது கண்னறைப் பிரிவில் தோன்றுவது. பா. germ plasm. (உயி)

architectural acoustics - கட்டிட ஒலியியல்: அரங்கு ஒன்றினுள் ஒலி தெளிவாகக் கேட்பதற்குரிய நிபந்தனைகளை இத்துறை கூறுகிறது. (இய)

argentometer - வெள்ளியுப்புமானி: கரைசலிலுள்ள வெள்ளியின் அளவை அளக்கப் பயன்படுங் கருவி. இது ஒரு நீர் மானியே. (வேதி)