பக்கம்:அறிவியல் அகராதி.pdf/356

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

pyx

354

qua


நெருக்கிக் கொன்று விழுங்கும்.விலங்கு காட்சியகங்களில் பார்வைப் பொருள். (உயி) pyxidium - மூடிபிரிகனி: குறுக்கு வட்டப்பிரிவினால் பொதிகை பிளந்து, அதன் சுற்றுறையின் மேல் பகுதி முடியாகும். இம்முடி பிரிந்து விழுகின்றபொழுது, விதைகள் வெளியேறும். எ-டு போர்டுலகா. (உயி).


Q

quadrat-நாற்சதுரத் தொகுதி: ஒரு சதுரமீட்டர் அளவுள்ள தாவரத் தொகுதி. இதன் இயைபை இங்கொன்றும் அங்கொன்று மாக ஆராய, அப்பகுதியில் தேர்ந்தெடுக்கப்படுவது. (உயி)

quadrate-சதுரத் தொங்கெலும்பு: இரு நிலை வாழ்விகள், பறவைகள், ஊர்வன ஆகியவற்றில் காணப்படுவது. கீழ்த்தாடை தொங்க உதவுவது. (உயி)

Quadratojugal-நாற்சதுர எலும்பு: சில முதுகெலும்பிகளில் மேல் தாடையின் முன்எலும்பு (உயி)

quadrivalent - நான்கு இணைதிறன்கொண்ட: (வேதி)

quadruped -நாற்கால் விலங்கு: நான்கு கால்களைக் கொண்ட விலங்கு: மான், மாடு, தவளை, ஓணான் (உயி)

quadruple point -நானிலை: வெப்பம், அழுத்தம் ஆகியவற்றின் தனித்தநிலை. இதில் இருபகுதி தொகுதியின் நான்கு நிலைகள் சமநிலையில் இருக்கும்.(இய)

qualitative analysis-பண் (இயல்)பறிபகுப்பு: செயல்முறை வேதியியலின் பிரிவு. இதன் நோக்கம் ஒரு மாதிரியின் ஆக்கப்பகுதிகளை இனங்கண்டறிதல் அல்லது அடையாளங் கண்டறிதல். (உயி)

qualitative characters - இயல்பறி பண்புகள்: அகவய நிலையில் ஒரு கூட்டத்தின் பண்புகளை ஆராய்வது. (க.உள)

quantitative -அளவறி பகுப்பு: தனிமங்களைக் கண்டறிந்தபின், ஒரு கரிமப்பொருளின் மூலக்கூறு அமைப்பை அறியும் அடுத்த நிலை. ஒரு சேர்மத்தில் இருக்கும் பல தனிமங்களின் அளவை மதிப்பிடுதல் இதில் நடைபெறுகிறது. அதாவது எடை மூலம் பொருளின் சதவீத இயைபு அறியப்படுகிறது. இதுவும் செயல்முறை வேதியியலின் பிரிவே. (வேதி)

quantitative characters - அளவறி பண்புகள்: ஒரு சூழ்நிலைத் தொகுதியிலுள்ள கூட்டத்தின் இயல்புகளைப் புறவய நிலையில் ஆராய்வது, தொகை, செறிவு, அதிர்வெண், மிகுமை, ஓங்கல் ஆகியவை இந்த ஆராய்ச்சியில் ஆய்பொருள்களாகும். (வேதி)

quantum -குவாண்டம்,சிப்பம்: அளவு,துளி,ஒரு வினை நிகழ் முறையில் உறிஞ்சப்படும் அல்லது விடுவிக்கப்படும் ஆற்ற