பக்கம்:அறிவியல் கலைச்சொல் களஞ்சியம்-இறுதிப்பகுதி.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Propeller hub: (வானூ.) முற்செலுத்திக் குடம்: விமானச் சூழல் விசிறியின் மையப்பகுதி: இது இடைத்தொலைவு அளவினை மாற்றும் எந்திர அமைப்பு உடையது. இதனுடன் அலகுகளும் இணைக் கப்பட்டிருக்கும்.

Propeller rake: (வானூ.) முற்செலுத்திச் சாய்வுகோணம்: விமா னத்தில் ஒரு சுழல் விசிறி அலகின் மையப்பகுதியை அச்சுக்குச் செங் குத்தான தளப்பரப்புடன் இணைக்கும் கோட்டின் சராசரிக் கோணம்.

Propeller root: (வானூ.) முற்செலுத்திக் கொளுவி: புடைப்புப் பகுதியின் அருகிலுள்ள முற்செலுத்தி அலகின் பகுதி.

Propeller shaft: (தானி.) முற்செலுத்திச் சுழல் தண்டு: இதனை "இயக்குச் சுழல் தண்டு" என்றும் கூறுவர். உந்துவிசையை பின்புற இருசுக்கு அனுப்பிவைப்பது இது தான்.

Propeller thrust: (வானூ.) முற்செலுத்தி உந்துவிசை: விமானத்தின் முற்செலுத்தியின் முன்னோக்கி உந்தித்தள்ளும் திறன் .

Propeller tipping: (வானூ.) முற்செலுத்திச் சரிவுக் காப்பு: முற் செலுத்தி அலகின் நுனியிலுள்ள , சாய்ந்து விழுவதைத் தடுக்கும் பாதுகாப்பு அமைவு.

Propeller turbine: (வானூ.) முற்

38

Pro

488

Pro


செலுத்து உருளை: நீர் அல்லது நீராவியால் சுழலும் உருளையுடைய விமான எந்திரம்.

Proportional dividers : வீத அளவுக் கவராயம்: வரைபடங்கள் வரைவதற்குப் பயன்படும் கவராயம். இதில் இரு முனைகளுடைய கால்கள் ஒரு சுழல் முளையுடனும் திருகுடனும் இணைக்கப்பட்டிருக்கும். இந்தச் சுழல் முனையையும் திருகையும் கையாண்டு கவராயத்தை வேண்டிய நிலைக்குக் கொண்டுவந்து அளவிடலாம்.

Proportional limit: (உலோ.) வீத அளவு வரம்பு : உலோகங்களில், நீட்சியடைவது அல்லது பாரத்தின் வீத அளவில் இருப்பது அற்றுப் போகும் நிலை,

Proportionately: வீத அளவு: வடிவளவு, பெறுமானம், முக்கியத் துவம் ஆகியவற்றுக்கு உரிய சரி சமவீத அளவில் இருத்தல்.

Propulsive efficiency (வானூ.) உந்தெறிவுத் திறன்: விமானத்தில் உண்மையான உந்து திறனுக்கும் முற்செலுத்தத்திற்குமிடையிலான விகிதம்.

Proscenium: அரங்கு முகப்பு: நாடக அரங்கின் முன்பகுதி, திரைக்கு முன்புள்ள மேடைக்கு மேலுள்ள கவான்பகுதியையும் இது உள்ளடக்கும்.

Protein: (வேதி.) புரதம்: கார்பன், ஆக்சிஜன், ஹைட்ரஜன், நைட்ர