பக்கம்:அறிவியல் கலைச்சொல் களஞ்சியம்-இறுதிப்பகுதி.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



Ser

528

Ser


பாரத்தின் ஏற்ற தாழ்வுக்கேற்ப இதன் வேகம் அமையும்.

Series parallel circuit : (மின்.) தொடர் இணை மின்சுற்று வழி : தொடர் மின்கல அடுக்கு வரிசை யில் இணைக்கப்பட்டுள்ள இரண்டு அல்லது அவற்றுக்கு மேம்பட்ட இணை மின்சுற்றுவழிகளைக் கொண்ட ஒரு மின் சுற்றுவழி.

Series resonance : தொடர் ஒத்திசைவு.

Series welding : தொடர் பற்றவைப்பு : மின் தடையுடைய பற்ற வைப்பு முறை. இதில், தனியொரு பற்றவைப்பு மின்மாற்றி மூலம் இரண்டு அல்லது அவற்றுக்கு மேற்பட்ட பற்றவைப்புகளைச் செய்யலாம். இதில் ஒவ்வொரு பற்றவைப்பின் வழியாகவும் மொத்த மின்னோட்டமும் செல்லும்.

                                                Series wound generator: தொடர் சுருணை மின்னாக்கி: 
                                                   
                                                

Serif: (அச்சு.) முனைக்கட்டு: எழுத்துருவில் விளிம்பிற்குக் கட்டுருக் கொடுக்கும் நுண்வரைமானம்.

Serration: இரம்பப் பல் விளிம்பு: ரம்பத்தில் உள்ளது போன்ற பல் விளிம்பு அமைப்பு.

Service main: மின்நுகர்வாய்.


Service pipe: நீர்பாய் குழாய் : நீர்-காற்று வகையில் முதன்மைக் குழாயிலிருந்து கட்டிடத்திற்குச் செல்லும் தனிக்குழாய்.

Service switch: (மின்.) கட்டுப்பாட்டு விசை: ஒரு கட்டிடத்தின்

                                                     மின் கருவிகள் முழுவதையும் கட்டுப்படுத்தும் வகையில் அக்கட்டிடத்தின் மின் கம்பி அமைப்பின் நுழைவாயில் நுனியில் செருகப்பட்டுள்ள இணைப்பு விசை.

Service tank: (வானூ.) எரிபொருள் கலம்: ஒவ்வொரு மின் நிலையத்திற்கு அருகிலும் அமைந்துள்ள நிலையான எரிபொருள் கலம். இதனுள் மற்ற கலங்களிலிருந்து எரிபொருள் இறைத்துச் செலுத்தப்படும். இக்கலத்திலிருந்து எஞ்சினுக்கு எரிபொருள் எடுத்துக் கொள்ளப்படும்.

Service wires: (மின்.) மின் வழங்கு கம்பிகள்: ஒரு கட்டிடத்திலுள்ள மின் சுமையுடன் இணைந்த மின் வழங்கீட்டுக் கம்பிகளை ஒரு மின்மாற்றியிலிருந்து மின் வழங்கீட்டு ஆதாரத்துடன் இணைக்கும் மின் கம்பிகள்.

Servo control: (வானூ.) பனிப்புக் கட்டுப்பாடு: வளிவியக்கம் சார்ந்த அல்லது எந்திரவியல், இடைமாற்றீடு மூலம் விமானம் ஒட்டியின் முயற்சிக்கு ஆதாரவளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டுச் சாதனம்.

Servo motor: பணிப்பு முன்னோடி.

                                                      <Ses quiplane:(வானூ)குறையலகுப் பரப்பு விமானம்: ஒரு சிறகின் பரப்பளவு இன்னொரு சிறகின் பரப்பளவில் பாதிக்கும் குறைவாகவுள்ள ஒருவகை இருதள விமானம்.

Set screw: (எந்.) சதுரத் திருகு: சதுர வடிவ அல்லது வேறு வடிவக்