பக்கம்:அறிவியல் கலைச்சொல் களஞ்சியம்-இறுதிப்பகுதி.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ளீயத்தகடு : அரிமானத்தைத் தடுப்பதற்காக வெள்ளீய முலாம் பூகப்பட்ட மெல்லிய இரும்பு அல்லது எஃகுத் தகடு.

Shellac : அவலரக்கு : மெருகு எண்ணெய் செய்வதற்குப் பயன்படும் தகட்டு வடிவாக்கப்பட்ட அரக்கு. இது பொதுவாக வெள்ளை நிறத்திலும், ஆரஞ்சு நிறத்திலும் இருக்கும்.

Shellac varnish : அவலரக்கு வண்ணம் : அவலரக்கினை ஆல்கஹாலில் கரைத்துச் செய்யப்படும் வண்ணப்பொருள். இதனை வடிவமைப்பாளர்கள் பெரிதும் பயன்படுத்துகின்றனர்.

Shell drill i (எந்.)உட்புழைத் துரப்பணம் : சக்கரம் சுழலும் இருசு அல்லது கதிரில் செய்யப்படும் உட்புழையான துரப்பணம் செலுத்தப்படும் துவாரங்களை விரிவாக்கம் செய்வதற்குப் பயன்படு கிறது.

Sherardize; (உலோ.)நாகமுலாமிடல்: உலர் வெப்ப முறையில் மின்பகுப்பு மூலம் துத்தநாக முலாம் பூசுதல்.

Sheraton : அலங்கார நாற்காலி : பதினெட்டாம் நூற்றாண்டுப் பாணியிலமைந்த நாற்காலி. இதனை தாமஸ் ஷெராட்டான் (1751-1806) உருவாக்கினார்.

Shifter forks :(பட்.) இடமாற்றுக் கவடு :ஒரு வார்ப்பட்டை

She

581

Shi


யில் கால்பரப்பி, அதனைக் கப்பியை இறுக்குவதற்கும், இறுக்கமான கப்பியைத் தளர்த்துவதற்கும் பயன்படும் கரம்.

Shim : (எந்.) சிம்பு: பொறிப் பகுதிகளைப் பொருத்துவதற்குப் பயன்படும் மெல்லிய துணுக்கு.

Shimmy (தானி.) முன் சக்கர அதிர்வு : உந்து ஊர்திகளில் முன் சக்கரங்கள் அதிர்வுறுதல், சீரற்ற கம்பிச்சுருள் அமைப்பு, டயரில் சமனற்ற காற்றழுத்தம், மறையாணிகள் கழன்றிருத்தல் போன்ற பல காரணங்களால் ஏற்படலாம்.

Shingles : (க.க.) அரையாப்பு: கூரைகளையும், பக்கச் சுவர்களையும் மூடுவதற்குப் பயன்படும் மரத் துண்டுகளிலான அல்லது பிற பொருள்களினாலான சிறியதுண்டு. இதன் கனம் 1/16" முதல் 1/2" இருக்கும்.

Shipping measure : கப்பல் அளவை : ஒரு கப்பலின் உள் கொள்ளளவினை அளவிடுவதற்கான அளவு முறை. 1 பதிவு டன் = 100 கன அடி

கப்பல் சரக்குகளை அளவிடுவதற்கு :

                                                        1 யு. எஸ். கப்பல் டன் - 40 கன அடி=32.143 யு.எஸ். புஷல்கள்

Shipplane : (வானூ.) கப்பல் விமானம் : கப்பலின் மேல் தளத்திலிருந்து ஏறவும், அதில் வந்து