பக்கம்:அறிவியல் கலைச்சொல் களஞ்சியம்-இறுதிப்பகுதி.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



Sta

554

Sta


stall : (வானூ.) விமான விசையிழப்பு : பறப்பதற்குப் போதிய விமான வேகம் குறைபடுதல்.

stalling speed : (வானூ.) விசையிழப்பு வேகம்: விமானத்தின் மிக உயர்ந்த செந்தூக்கான குணக உயரத்தில் விமானம் சீராகப் பறக்கும்போது அதன் வேகம்.

stamping press: (அச்சு.) புடைப்பச்சு எந்திரம் : புடைப்புருப்படச் செதுக்கு அச்சு எந்திரம்.

Stanchion : கம்பம் : பலகணிச் செங்குத்துச் சலாகை:

standard : திட்ட அளவு : துல்லியமான இலக்களவு, முத்திரை நிறையளவு முன்மாதிரி உயர்வு நயம்.

standard atmosphere (வானூ.) திட்ட அளவு வாயு மண்டலம் : விமானத்தின் செயல்முறையை ஒப்பீடு செய்வதற்குப் பயன்படும் வாயு மண்டலம்.

அமெரிக்காவில் தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் திட்ட அளவு வாயுமண்டலம் என்பது, 40° உயரத்தில் காணப்படும் சராசரி நிலைமைகள் ஆகும்.

Standard international atmosphere: (வானூ.) திட்ட அளவு பன்னாட்டு வாயுமண்டலம்: பன்னாட்டுத் திட்ட அளவு வாயு மண்டலம் எனப் பயன்படுத்தப்படுவது: சராசரிக் கடல் மட்டத்தில், 150C

வெப்பநிலையில், 1,013.2 மில்லி பார் அழுத்தத்தில், கடல் மட்டத்திலிருந்து 11 கி.மீ. வரையில் கிலோ மீட்டருக்கு 65°C இழப்பு வீதத்தில், அதன்பிறகு-56.5°C வெப்ப நிலையில் நிலவும் காற்றழுத்த நிலை.

Standardized cell: (மின்.) தர அளவு மின்கலம்: துல்லியமாகச் சோதனைகள் செய்வதற்கு, மின்னழுத்தம் மாறாமல் நிலையாக இருக்கக்கூடிய மின்கலம் தேவை. நடைமுறையில் இந்த மின்கலத்திலிருந்து குறிப்பிடும்படியான மின்னோட்டம் எதுவும் எடுத்துக் கொள்ளப்படுவதில்லை. கிளார்க் மின் கலத்தை முதலில் தர அளவு மின்கலமாகப் பயன்படுத்தினார்கள். இப்போது பொதுவாக வெஸ்டன் மின்கலம் பயன்படுத்தப்படுகிறது.

Standard lamp : தொலை ஒளி விளக்கு : தொலை ஒளி நிலைக் கம்ப விளக்கு.

Standing matter: (அச்சு.) நீலுவை அச்சுரு: மேற்கொண்டு அச்சடிப்பதற்கு அச்சுக் கோத்து வைக்கப் பட்டுள்ள அச்செழுத்துத் தொகுதி.

Standpipe: (பொறி.) நிலை குத்துக் குழாய்: நீர்த்தேக்கத் தொட்டி போன்று பயன்படுத்தப்படும் செங் குத்தான பெரிய குழாய் அல்லது நீர்க்கோபுரம், குடி நீர் வழங்குவதில் ஒரே சீரான அழுத்தம் கிடைப்பதற்கு இது பயன்படுகிறது.

Stanniferous: வெள்ளீயம் அடங்கிய பொருள்: