பக்கம்:அறிவியல் கலைச்சொல் களஞ்சியம்-இறுதிப்பகுதி.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Sweating : (உலோ.) உலோக இணைப்பு: உலோகப் பகுதிகளைப் பரப்பின் இழைவாய் ஒன்றுபடுத் திப் பொருத்துதல்.

Swedish iron : (உலோ.) சுவீடிஷ் இரும்பு : பாஸ்வரம், கந்தகம் சிறிதும் இல்லாத மிக உயர்ந்த தர மான இரும்பு.

Sweep : அக வளைவியக்கம் : ஒரு தொலைக்காட்சிப் பட அல்லது ஒளிப்படக் குழாயில் எலெக்ட்ரான் கற்றையின் இயக்கம்.

Sweet oil : (வேதி.) ஒலிவ நெய் : குறைந்த தரமுடைய, கெட்டியான ஒலிவநெய். இது மருந்துப் பொருளாகவும், சமையலுக்காகவும் மசகுப் பொருளாகவும் பயன்படுகிறது.

Sweet or red gum : (மர.வே.) செம்மெழுகு மரம் : செம்மெழுகு தரும், மலையில் வளரும் மரம். இது பெரிதாக வளரும். இது மென்மையானது; எனினும் வலுவானது. இது அழகான வடிவம் பெறும்; எனினும் உருத்திரிந்து வளரும்.

Swell : (வார்.) புடைப்புரு : வார்ப்படத்தைப் போதிய அளவு அழுத்தம் கொடுக்காததால் ஏற் படும் புடைப்பு.

Swing saw : (மர.வே.) ஊசல் ரம்பம் : மேலிருந்து தொங்கவிடப் பட்டிருக்கும் கீலுள்ள சட்டகத்தில் பொருத்தப்பட்டுள்ள வட்ட வடிவ ரம்பம். வேலைப்பாடு செய்ய

48


Swi

569

Swr


வேண்டிய பொருள் நிலையாக இருக்க, ரம்பத்தை அங்குமிங்கும் அசைத்து இயக்கி அறுப்பு வேலை செய்யப்படுகிறது.

Switch : (மின்.) மின் விசை : மின்சுற்று வழியை இணைக்கவும் முறிக்கவும் பயன்படும் சாதனம்.

Switch board : (மின்.) மின் விசைப் பலகை : பல மின் தொடர்பு இணைப்புகள் கொண்ட பலகை. இதில் மின்மானியும் பொருத்தப்பட்டிருக்கும்.

Switch box : (மின்.) மின் விசைப் பெட்டி: மின்விசை அமைப்பினைப் பாதுகாக்கவும், மின் னோட்டம் செல்லும் உறுப்புகள் ஒன்றையொன்று தொட்டு விடாமல் தடுக்கவும் பயன்படும் இரும்புப் பெட்டி.

Swivel : (எந்.) சுழல் திருகு : ஒன்றின் மீது ஒன்று சுழலும்படி அமைந்த திருகு அமைப்பு.

Swivel vise : (பட்.) சுழல் குறடு : இது ஒரு மேசைக்குறடு. இது சுழன்று தான் பற்றியிருக்கும் பொருளைத் தேவையான நிலைக்குக் கொண்டு வரும்.

S wrench : (எந்.) S - திருகுக் குறடு : 'S' என்ற ஆங்கில எழுத்தின் வடிவிலுள்ள திருகுக் குறடு. இது நிலையானதாக அல்லது தக்கவாறு அமைத்துக் கொள் ளத் தக்கதாக அமைந்திருக்கும்.