பக்கம்:அறிவியல் கலைச்சொல் களஞ்சியம்-இறுதிப்பகுதி.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



Tai

572

Tai


ஆதாரப் பிரிவுகளையும் இணைக் கிற தண்டு.

Tail heavy: (வானூ.) வால் இறக்கம்: (விமானம்) காற்றை விட எடைகூடிய விமானம் பறக்கும் போது நீளவாட்டு கட்டுப்பாடு விடுபடும்போது வால்புறம் கீழ் நிலையில் இருக்கும். அப்போது விமானி குறிப்பிட்ட உயரத்திலேயே இருக்க விரும்பினால் கண்ட்ரோல் தடியை இயக்கியாக வேண்டும்.

Tailing: (க.க.) புடைப்புக்கல் : சுவரில் செருகப்பட்டு வெளியே துருத்தி நிற்கும் செங்கல் அல்லது கல்லின் பகுதி.

Tail joist: (க.க.) வால் உத்தரம் : ஒரு முனை தலை உத்தரத்துடன் வந்து முடிகிற உத்தரம்.

Tailless airplane: (வானூ.) வாலில்லா விமானம்: நிலைப்படுத்தவும் பயன்படுத்தப்படுகிற பகுதிகள் இறக்கைக்குள்ளாகவே அமைக்கப்பட்ட விமானம்.

Tail light: (வானூ. பொறி.) வால் விளக்கு: பின்புற விளக்கு: ஒவ்வொரு மோட்டார் வாகனத்திலும் பின்புறத்தில் சட்டப்படி அமைக்கப்படவேண்டிய, இரவில் பூட்டப் படுகையில் எரிய வேண்டிய சைகை விளக்கு.

Tail piece: (அச்சு.) இறுதிப்பகுதி முத்தாய்ப்பு: ஒரு நூலில் ஓர் அத்தியாயத்தின் முடிவில் அல்லது அச்

சிடப்படுகிற குறி.

Tail pipe : உறிஞ்சு குழாய்.

Tail print : வால் அச்சு: அச்சுக்குள்ளிருந்து மாதிரி வடிவத்தை வெளியே எளிதில் எடுப்பதற்கான வகையில் மைய வடிவத்தில் அமைந்த பிடி, உள் அச்சு நன்கு அமைய அதற்கு வசதி செய்வது.

Tall screw : வால் திருகாணி: கடைசல் (லேத்) எந்திரத்தில் நிலைப்பிடிமானத்தின் தண்டை இயக்கச் செய்யும் திருகாணி.

Tail skid : (வானூ.) வால் சறுக்குக் கட்டை தரையில் நிற்கிற விமானத்தின் வால் பகுதியைத் தாங்கி நிற்கிற சறுக்குக் கட்டை.

Tail slide : (வானூ.) வால் சறுக்கு: விமானம் செங்குத்தாக உயரே ஏறிய பிறகு கீழே சறுக்குகிற நிலை ஏற்பட்டதைத் தொடர்ந்து விமானம் வால் கீழ் நோக்கியதாக பின்புறமாக கீழ்ப்புறமாகச் செயல்படும் நிலை.

Tail spin : (வானூ.) வானூர்தியின் சுழல் கழுகுப் பாய்ச்சல்.

Tail stock : (எந்.) வால் பிடிமானம் : ஒரு கடைசல் எந்திரத்தில் ஒரு பொருளைப் பொருத்துவதில் ஒரு புறம் நிலையாக இருத்திய தலைப்பிடிமானம் இருக்கும். மற்றொரு புறத்தில் முன்னும் பின்னும் நகர்த்தக்கூடிய வால் பிடிமானம் இருக்கும்.