பக்கம்:அறிவியல் கலைச்சொல் களஞ்சியம்-இறுதிப்பகுதி.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

573

Tail stock spindle : (எந்.)நிலைப்பிடிமானத் தண்டு: கடைசல் எந்திர கடைசல் நிலைப்பிடிமானத்தில் செயலற்ற மையத்தைத் தூக்குகிற செருகு குழல் அல்லது தண்டு.

Tail surface : (வானூ.) வால் பரப்பு: ஒரு விமானத்தின் வால் பகுதியில் உள்ள நிலைப்படுத்துகிற அல்லது கட்டுப்படுத்துகிற பரப்பு.

Tail unit : (வானூ.) வால் தொகுதி: விமானத்தை நிலைப்படுத்தவும் கட்டுப்படுத்தவும் உதவ விமானத்தின் பின்புறத்தில் அமைந்த எல்லா பரப்புகளும் அதாவது நிலைப்படுத்தி, துடுப்பு, சுக்கான் தூக்கி ஆகியவை அடங்கும்.

Tail wheel : (வானூ.) வால் சக்கரம் : தரையில் உள்ளபோது ஒரு விமானத்தின் வால் பகுதியைத் தாங்கி நிற்கும் சக்கரம். அது திருப்பத்தக்கதாக அல்லது திருப்பமுடியாததாக, நிலையாக அல்லது சுழலும் வகையில் அமைக்கப்பட்டிருக்கலாம்

Tain : வெண் மெல் தகடு; முகக் கண்ணாடியின் முகட்டுக் காப்புத் தகரம்.

Take : (அச்சு.) எழுத்துப் பகுதி: அச்சுக்கோப்பவர் எந்த ஒரு சமயத்திலும் வைத்திருக்கின்ற ஒரு வாசகத்தின் ஒரு பகுதி.

Take - off distance: (வானூ).

எழும்பு தொலைவு'சுழி:நிலை வேகத்திலிருந்து கிளம்புகிற ஒரு விமானம். இறுதியாகத் தரையிலிருந்து அல்லது நீரிலிருந்து தொடர் பகன்று மேலே எழும்புவது வரையிலான தொலைவு. மேலெழும்பும் தொலைவு, காற்றமைதி அல்லது குறிப்பிட்ட காற்று வேக அடிப் படையில் கணக்கிடப்படுவது.

Take - off speed : (வானூ.) எழும்பு வேகம்: ஒரு விமானம் முற்றிலுமாக வானில் எழும்பிய நிலையில் உள்ள காற்று வேகம்.

Take-up.: (பட்.) இறுக்கமைவு: தேய்மானத்தால் அல்லது வேறு காரணங்களால் பகுதிகளில் ஏற் பட்ட தவிர்வைப் போக்குவதற் கான ஒரு கருவி.

Taking up: (பட்.) சரிப்படுத்து: எந்திரம் போன்றவற்றில் தேய்மானத்துக்காகத் தகுந்தபடி. பொருத்துதல் சம்பந்தப்பட்டது.

Talo: வெளிமக் கன்மகி: மென் கல் பொடி: காகிதம், உய்வுப் பொருட்கள், அழகு சாதனப் பொருட்கள் முதலியவற்றில் பயன்படுத்தப்படுகிற மென் கல்பொடி.

Tallow: கொழுப்பு; விலங்கின் உருக்கிய நிணம்: விலங்குக் கொழுப்புகளிலிருந்து தயாரிக்கப்படுவது.

Tambour: (க.க.) கூரையிட்ட பாதை: கூரையுள்ள சிறிய மூடப்பட்ட நடைபாதை.