பக்கம்:அறிவியல் கலைச்சொல் களஞ்சியம்-இறுதிப்பகுதி.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

576

பிணைப்பதற்குப் பயன்படுவது. 1 முதல் 10 வரை எண் அடிப்படையில் அளவு வரிசைப்படுத்தப்பட்டது. எண் 1 என்பது அகலப் பகுதியில் 156" குறுக்களவும் 81/4 முதல் ஒரு அங்குல நீளமும் கொண்டது. எண் 10 என்பது அகலப்பகுதியில் 706 அங்குலக் குறுக்கள வும் 11/2 முதல் 6 அங்குல நீளமும் கொண்டது.

Taper reamer : (எந்.) குவியத்துளை துருவி: குவிந்து அமையும் துளைகளில் உள்ளே செலுத்தி துளையைத் தேவையான அளவுக்குத் துருவிப் பெரிதாக்குவதற்கான சாதாரண நீண்ட துருவு பள்ளம் கொண்ட துளைத் துருவி. குவிய ஆணியைச் செலுத்துவதற்கு துளை போடப் பயன்படுவது.

Taper - pin drills: (உலோ.வே.) குவிய ஆணி துளை கருவி: அடிக்கு 1/4 அங்குலம் வீதம் குவிந்து அமைந்த, பல் போன்ற கூரான விளிம்புகளைக் கொண்ட துளையிடு கருவி.கட்டி உலோகத்திலிருந்தான குவிய ஆணிகளை செருகுவதற்கான துளைகளைப் போட வல்லது .

Taper tap : குவியப் புரியிடு கருவி: நீளவாட்டில் குவிந்து அமைந்த புரியிடும் கருவி. துளையிடப்பட்ட பின் துளையில் திருகு புரியிடுவதற்கு எளிதில் உதவுவது.

Taper turning : (எந்.) குவியக் கடைசல்: கடைசல் எந்திரத்தில் நிலைப்பிடிமானத்தைப் பொருத்தா

மல் அல்லது குவிய இணைப்பைப் பொருத்திக் கடைவது.

Tap, hob, sellers: (எந்.) நீண்டபுரியிடு கருவி: இதில் நீள்வாட்டில் மத்திய பகுதியில் மட்டும் புரி இருக் கும். அத்துடன் பல குழிவுகள் இருக்கும். அச்சுகளில் மற்றும் கடைசல் எந்திர புரியிடு கருவிகளில் புரி போடுவதற்கு அது பயன்படுகிறது.

Tapestry: அலங்காரத் திரைச் சீலை: தொங்கவிடுவதற்கும், இருக்கைகளின் பரப்பு மீது பொருத்துவதற்குமான அலங்கார சித்திர வேலைப்பாடு அமைந்த துணி.

Tap hole: (வார்.) வடி துளை: உலோகத்தை உருக்குவதற்குப் பயன்படுத்தப்படும் குழிவு வாணலியின் புடைப்பில் உள்ள துளை, உருகிய உலோகம் இதன் வழியே பெறப்படும்.

Tapped face plate: (பட்.) புரியிட்ட முகத்தகடு: ஒரு முகப்புத் தகட்டில் துளைகளுக்குப் பதில் அல்லது காற்றுடன் சேர்த்து புரியிட்ட துளைகள் இருக்கும்.

Tapper tap: (எந்.) புரி எந்திர புரி தண்டு: புரியிடும் எந்திரங்களில் நட்டுகளில் புரியிடுவதற்கான விசேஷ புரிதண்டு.

Тарpet: (தானி.) டாப்பெட்: புடைச் சக்கரத்துக்கும் வால்வுக்கும் இடையே முன்னும் பின்னுமாக இயங்கும் பகுதி.