பக்கம்:அறிவியல் கலைச்சொல் களஞ்சியம்-இறுதிப்பகுதி.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Tappet valve: (தானி.) தட்டியக்கப் பிதுக்கத் தடுக்கிதழ்: வட்டுத் தலையுடன் கூடிய தடுக்கிதழி லிருந்து ஒரு தண்டு நீண்டு செயல்வியாக இருக்கும். உள எரி என்ஜினில் பொதுவில் பயன்படுகிறது.

Tapping: (உலோ.வே.) புரியிடுதல்: கையால் அல்லது எந்திரத்தைப் பயன்படுத்தி ஒரு புரிதண்டு மூலம் ஒரு துளையினுள் புரிகளைப் போடுதல்,

Tapping bar: (வார்.) வடி தண்டு (வார்ப்பு): 3/4 முதல் 11/4 அங்குல குறுக்களவும் 3 முதல் 10 அடி நீளமும் உள்ள இரும்புத் தண்டு. உலைத் தொட்டியில் உருகிய நிலையில் உள்ள இரும்புக் குழம்பை வெளியே பாயச் செய்ய அத்தொட்டியின் திறப்பு வாயைத் திறப்பதற்குப் பயன்படுவது.

Tapping machine: (பட்.) புரியிடு எந்திரம் : சிறு உறுப்புகளில் உற்பத்திப் பணிகளில் அடிக்கடி பயன் படுத்தப்படுகிற ஒரு எந்திரம். ஒரு துளையில் புரியிட முன்புற இலக்கமும் பின்னர் வெளியே எடுக்க எதிராகச் சுற்றும் இலக்கமும் கொண்டது.

Tap remover (பட்.) புரி தண்டு அகற்றி: துளைக்குள் உடைந்த புரி தண்டை வெளியே திருகி எடுப்பதற்கு அதைப் பற்றிக், கொள்வதற்கான கருவி

Tap splice : (மின்) டேப்

49

577

பிணைப்பு:காண்க கிளை இணைப்பு.

Tap wrench: (எந்.) புரி தண்டு பிடிகருவி: துளைகளில் புரியிடுகையில் புரிதண்டை கெட்டியாகப் பற்றிக் கொண்டு இயக்குவதற்கான இரட்டைப்பிடி நெம்புகோல்.

Tarnish : மங்கு: மினுமினுப்பு இழப்பு மங்கலாகுதல்.

Tar - paulin : கருங் கித்தான்: கான்வாசினால் ஆன நீர் புகாத கெட்டியான போர்வை.

Taut : விறைப்பு: விறைப்பாக, நன்கு இழுக்கப்பட்ட, தொய்வு இல்லாமல் ஒரு கயிறு விறைப்பாக இழுக்கப்பட்டது போல.

Tawing : பதனிடுதல்: படிக்காரம் அல்லது உப்பை க் கொண்டு தோலைப் பதனிடுதல்

Taxi : (வானூ.) தரை கடலில் ஓடும் விமானம்: சொந்த இயங்கு திறன் கொண்டு ஒரு விமானத்தைத் தரையில் ஒடச் செய்தல். கடல் விமானத்தை நீரின் மீது ஒடச் செய்தல்.

Taxi - meter (எந்.) உந்து வேகமானி: ஒரு வாடகை வண்டி ஒடிய தூரத்தை அளவிடும் கருவி, வாடகையைக் கணக்கிடுவதற்குமான கருவி.

Taxi - way (வானூ.) விமான நகரு பாதை: விமானம் இறங்கு