பக்கம்:அறிவியல் கலைச்சொல் களஞ்சியம்-இறுதிப்பகுதி.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

402

Live load: (பொறி.) இயங்கு பாரம்: இயங்குகின்ற அல்லது திரும்பத் திரும்ப வருகிற பாரம் இது அதன் இயைபில் மாறாமல் இருப்பதில்லை.

Live matter: (அச்சு ) அச்சு வாசகம்: அச்சிடவேண்டிய வாசகம்.

Live spindle: (எந்.) இயங்கு கதிர் ; ஒரு கடைசல் எந்திரத்தின் சுழலும் பகுதியின் உராய்வு தாங்கி உருளையிலுள்ள சுழலும் கதிர் இது வால் பகுதியிலுள்ள நிலையான கதிருக்கு நேர் எதிரானது,

Load: (மின்.) மின்னோட்ட அளவு: மின் விசை ஆக்கப் பொறியால் குறித்த காலத்தில் வெளியேற்றப் படும் மின்னோட்ட அளவு.

Loaded wheel: அரவைச் சக்கரம் : அரவை செய்யப்படும் பொருளின் துகளினால் மெருகிடப்பட்ட அல்லது தடங்கலிட்ட சக்கரம்.

Load factor: (வானு.) சுமைக் காரணி: ஒரு விமானத்தில் ஒர் உறுப்பின் மீதான குறிப்பிட்ட பாரத்திற்கும், நேரிணையான அடிப்படைப் பாரத்திற்குமிடையிலான விகிதம். இது பொதுவாக, முறிவுறுத்தும் பாரத்திற்கும் அடிப்படைப் பாரத்திற்குமிடையிலான விகிதமாகக் குறிக்கப்படும்.

Loading:காகித மெருகுப் பொருள்: காகிதத்தை வழுவழுப்பாக்குவ தற்கு அல்லது ஒளி புகாத படி

செய்வதற்குப் பயன்படுத்தப்படும் வண்ணப் பொருள் அல்லது கனிமப் பொருள்.

Loam : (வார்.) களிச்சேற்று வண்டல்: வார்ப்பட வேலையில் பயன்படும் மணலும் களிமண்ணும் கலந்த கலவை.

Loam molds: (வார்.) களிச் சேற்று வண்டல் வார்ப்படம்: செங்கற்களினால் உருவாக்கப்பட்டு களிச்சேற்று வண்டல் கொண்டு மேற்பூச்சு பூசப்பட்ட வடிவங்கள். இநத வார்ப் படங்கள் பெரும்பாலும் பெரிய வடிவங்களை வார்ப்பதற்குப் பயன்படுத்தப்படுகின்றன.

Lobby: (க. க.) முகப்பு அறை : ஒரு கட்டிடத்தில் முகப்பிலுள்ள ஒரு பெரிய அறை உணவகங்களில் உள்ளதுபோல் இதனை பொதுக்கூடமாகவும், புகுமுகக்கூடமாகவும் பயன்படுத்தலாம்.

Loblolly pine : (மர.) சிவப்புத் தேவதாரு : கரணையுடைய, மென் மையான இழை கொண்ட, மிகுந்த மென் மரமுள்ள ஒரு வகைத் தேவ தாரு மரம். அமெரிக்காவின் தென் பகுதியில் சட்டங்களுக்கு மிகுதியும் பயன்படுத்தப்படுகிறது.

Local action: (மின்.) உள்ளிட நிகழ்ச்சி: ஓர் அடிப்படை மின் கலத்தில், மின்பகுப்பானின் மேற்பரப்பின் கீழுள்ள நேர்மின் முனையில் (எதிர்ச் சேர்முனை) ஏற்படும் வேதியியல் வினை.