பக்கம்:அறிவியல் கலைச்சொல் களஞ்சியம்-இறுதிப்பகுதி.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Loc

408

Loe


local cuerrents: (மின்.) உள்ளிட மின்னோட்டங்கள்: இவற்றைச் சுழல் மின்னோட்டங்கள் அல்லது ஃபூர்க்கால்ட் மின்னோட்டங்கள் என்றும் கூறுவர்.

Local vent: (கம்.) உள்ளிடக் காலதர்: ஒர் அறையிலிருந்து மாச டைந்த காற்றினை வெளியேற்றுவதற்கான ஒரு குழாய் அல்லது கூண்டு.

Locate: இட அமைவு: ஒரு குறிப் பிட்ட இடத்தில் அல்லது இடச்சூழலில் அமைத்தல்; இடத்தைக் குறித்திடுதல் அல்லது எல்லைகளைக் குறித்தல்.

Lock: (மர.) பூட்டு: பூட்டு விசைத் தாழ்.

Locker: (க. க.) நிலைப்பெட்டி: சிறிய அடுக்குப் பெட்டி.

Leckin: (இயற்.) ஒலித்தெளிவு: தொலைக்காட்சியில் படம் நிலையாகவும் தெளிவாகவும் தெரிவதற்குரிய நிலை. தொலைக்காட்சியில் ஒளிபரப்புக் கருவியிலிருந்து வரும் ஒரு கணத்தொகை நிகழ்வுத் துடிப்புகளினால் அலைவீச்சுச் சுற்றுவழிகள் கட்டுப்படுத்தப்படும் போது இந்த ஒளித்தெளிவு நிலை ஏற்படுகிறது.

Locking bolts: (எந்.) பூட்டு மரையாணிகள்: எந்திர உறுப்புகளை அவற்றின் நிலைகளில் பொருத்திப் பூட்டுவதற்குரிய மரையாணிகள்.

Locking stile: (தச்சு.) பூட்டு நிலை வரிச்சட்டம்: பூட்டு இணைக் கப்பட்டுள்ள கதவின் பகுதி.

Lock nut: (எந்) பூட்டுச் சுரையாணிகள: பிரதானச் சுரையாணி பின்புறம் நழுவிவிடாமல் தடுப்பதற்காக மற்றொரு கரையாணியின் அடிப்புறம் திருகி இறுககப்படும் ஒரு மெல்லி மரையாணி.

Lock pin: (எந்.)பூட்டு முளை: எந்திரத்தின் உறுப்புகள் கழன்று விடாமலிருப்பதற்காக உறுப்பினுள் செருகப்படும் பிணைப்பூசி அல்லது முளை.

Lock stitch:பூட்டுத் தையல் : தையல் எந்திரங்களில் தைப்பது போன்ற ஈரிழைத் தையல்.

Lockup : (அச்சு) முடுக்கிப்பூட்டுதல் : அச்சு எந்திரத்தில் அச்சுப் பதிப்புச் சட்டங்களை முடுக்கிப் பூட்டுதல்.

Lock washer: பூட்டு வளையம்: அழுத்த விற்கருள்போல் வினை புரியும் பிளவு வளையம். ஒரு பூட்டு மரைபோல் செயற்படுகிறது.

Locust : இலவங்கமரம் : நடு நிலக்கடலக மரவகை, கடினமானது. நீண்டநாள் உழைக்கக் கூடியது. புற அலங்கார வேலைப் பாடுகளுக்கு ஏற்றது.

Lodestone , (க.க.) அயக்காந்தம் : இயற்கையான காந்தக்கல்: மாக்னட்டைட்.

Loess : (மண்) மஞ்சள் வண்டல்: ஆற்றுப்பள்ளத்தாக்குகளில் படியும் களிமண் கலந்த சாம்பல் மஞ்சள் நிறமான வண்டல் படிவு. மிசிசிபிப்