பக்கம்:அறிவியல் கலைச்சொல் களஞ்சியம்-இறுதிப்பகுதி.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

412

வெட்டுப் பரப்பின் ஒர் அலகிலுள்ள காந்தக் கோடுகளின் அல்லது காந்தப் பெருக்கத்தின் எண்ணிக்கை.

Magnetic needle: (மின்.) காந்த ஊசி: ஒரு நுண்ணிய எஃகுக் காந்தம். இதனை ஒரு ஆதாரத்தில் வைக்கும்போது, பூமியின் காத்தத் துருவங்களுக்கேற்ப, இயல்பாக வடக்கு-தெற்குத் திசையில் நிற்கும். வடக்கு நோக்கிய கருவியில் எப்போதும் வடக்கையே காட்டும் காந்த ஊசி.

Magnetic permeability; (மின்.) காந்தத் தகவு: காந்தத் தாக்கு தலுக்கும் இளக்கி அடர்த்திக்கும் உள்ள தகவு, ஒரு பொருளுக்குள் காந்தம் எளிதாக ஊடுருவிச் செல்லக்கூடிய திறனைக் கணக்கிடும் அளவு.

Magnetic potential: (மின்.) காந்த ஆற்றல்: காந்தப் புலத்தின் எல்லையிலிருந்து ஒரு காந்தத் துருவ அலகினைக் காந்த ஆற்றல் தேவைப்படும் புள்ளிக்கு நகர்த்துவதற்குத் தேவைப்படும் பணியின் அளவு.

Magnetic screen or shield: (மின்.) காந்தத் திரை அல்லது கேடயம்: இது உட்புழையான இரும்புப் பெட்டி . இதன் மையப்பகுதி காந்த விசைக்கோடுகளின்றி அமைக்கப் பட்டிருக்கும்.

Magnetic switch: (மின்.) காந்த இணைப்பு விசை: மின்காந்தம்

மூலம் இயக்கப்படும் அல்லது கட்டுப்படுத்தப்படும் ஒர் இணைப்பு விசை,

Magnetic whirl: (மின்.)காந்தச் சுழற்சி: மின்னோட்டம் பாயும் ஒவ்வொரு கம்பியைச் சுற்றிலும் ஒரு வடிவமான காந்தப்புலம் நீர்ச்சுழி அல்லது சுழல் போல் அமைந்திருக்கும். இதுவே காந்தச் சுழற்சி எனப்படும். இது தூண்டலற்ற சுருணையைக் குறிப்பதில்லை.

Magnetism (மின்.)காந்த விசை:இரும்பு, எஃகு, வேறு பொருள் களுக்குள்ள ஒருவகை ஈர்ப்பு இயல்பு. இந்த இயல்பு காரணமாக, இவை குறிப்பிட்ட விதிகளுக் குட்பட்டு, ஈர்ப்புவிசைகளையும், எதிர்ப்புவிசைகளையும் செலுத்து கின்றன.

காந்தவியல்: காந்தவிசை பற்றிய விதிகளையும் நிலைகளையும் ஆராயும் அறிவியல் பிரிவு.

Magnetite: (கனி.) அயக்காந்தம் . (மாக்னட்டைட்): காந்த விசையுடைய இருமபுக் கனிமம (Fe3O4)

Magnetization: (மின்.) காந்த விசையூட்டுதல்: க ந் த த் தி ன இயல்புகளை ஏற்றல் அல்லது காந்தவிசையினை ஊட்டுதல்.

Magneto (மின்.) தனிக்காந்த மின்னாக்கி: உள் வெப்பாலைப் பொறி முதலியவற்றில் தீக் கொளு ஆவதற்காகப் பயன்படுத்தப்படும் தனி நிலைக்காந்த மின்னாக்கிப் பொறி. இதில் மின்காந்தத் தூண்டுதல் மூலம் மின் விசை உற்பத்தி