பக்கம்:அறிவியல் கலைச்சொல் களஞ்சியம்-இறுதிப்பகுதி.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



Mas

418

Mat


Master cylinder: (தானி.) தலைமை நீள் உருளை: உந்து தண்டு உடைய பாய்மரப் பொருளடங்கிய நீள் உருளை . இதன் மூலம் கால் மிதியை அழுத்தித் தடுப்பு செய்யப் படுகிறது.

Master gauge: தலைமை அளவி : அன்றாடம் பயன்படும் அளவிகளின் துல்லியத்தை அவ்வப்போது சோதனை செய்து பார்ப்பதற்குப் பயன்படும் அளவி.

Master key: (பட்.) ஆணித்திறவு: பல பூட்டுகளைத் திறக்க வல்ல திறவுகோல்.

Master switch : (மின்.) தலைமை விசை : ஒரு பிரதான மின் விசை. இதன் மூலம் மற்ற விசைகளின் இயக்கத்தைக் கட்டுப்படுத்த முடியும்.

Master taper : (எந்.) தலைமை அளவை வார் : செந்நிறமான அளவை வார். இதன் மூலம் உட்புறம் அல்லது வெளிப்புறம் மற்ற அளவை வார்கள் அளவிடப்படுகின்றன.

Master workman : தலைமைத் திறவாளர்: சாதாரண அளவை விட அதிகத் தேர்ச்சித் திறன் வாய்ந்த தொழிலாளர். "தலைமைப் பொறிவினைஞர்" என்பது பட்டறை மேன் முறையாளையும்,கண்காணிப்பாளர்களையும் குறிக்கும்.

Misstic : பூனைக் கண் குங்கிலியம் (கல்புகைக்கீல்) : நிலக்கீலினால் இயற்கையாகப் பூரிதமடைந்த மணற்பாறை. தளம் பரவுவதற்கு மிகவும் உகந்தது.

Mat : (குழை.) பாய் : குழைமவியலில் நெசவு .செய்யப்படாத இழைக் கண்ணாடிப் பொருள். ஊதிப்பெருக்கச் செய்தல் மூலம் செய்த குறுகிய கண்ணாடி இழைகளாலானது. இது படலமாக இருக்கும். சில பொருள்கள் முன்னுருவாக்க வடிவங்களிலும் அமைந்திருக்கும்.

Mat board : பாய் அட்டை : படச் சட்டங்களுக்குப் பயன்படுத்தப்படும் கனமான காகித அட்டை.

Matched boards : [மர.வே.] ஒட்டிணைப் பலகை : ஒன்றுடன் ஒன்று பொருந்தும்படி குவடு குழிவுகளுடன் கூடிய பலகை வரிச்சல்.

Matched Metal Moulding : (குழை.) ஒட்டினை உலோக வார்ப்படம் : இரு உலோக வார்ப்படங்களை அழுத்தி வெப்பமூட்டி ஒட்டிணைத்து வலுவாக்கிய வார்ப்படம்.

Match plates : (வார்.) ஒட்டிணைத் தகடுகள் : தோரணிகள் ஏற்றப்பட்ட உலோக அல்லது மரத் தகடுகள். பெருமளவு எண்ணிக்கையிலான வார்ப்படங்கள் தேவைப்படும் போது உற்பத்தியை அதிகமாக்க இது பயன்படுகிறது.

Mated position : (தானி.) இணைவுறு நிலை: நழுவுப் பல்லிணைகளை முறையாகக் கொளுவியிணைக்கும் போது அவை இணை