பக்கம்:அறிவியல் கலைச்சொல் களஞ்சியம்-இறுதிப்பகுதி.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Mar

417

Mas


Marl: (மண்.) சுண்ணக்கரிகை உரம்: களிமண்ணும், சுண்ணக் கரிகையும் கலந்த மண்வள உரச்சத்து.

Marquetry: (மர.வே.) உள் இழைப்பு வேலை: மரத் தளவாடங்களில் உள் இழைப்பு அலங்கார வேலைப்பாடுகள் செய்தல், அரிதாக தந்தம், எலும்பு, முத்து ஆகியவற்றிலும் இந்த வேலைப்பாடு செய்வதுண்டு.

Marsh gas or methane:(வேதி.) சதுப்பு வாயு அல்லது மீத்தேன்: (CH4): இலேசான, நெடியற்ற, தீப்பற்றக்கூடிய, ஹைட்ரோ கார்பன் என்னும் வாயு. சதுப்பு நிலங்களிலும், சுரங்கங்களிலும் கரிமப் பொருள்கள் சிதைவுறுவதால் இயற்கையாகக் கிடைக்கிறது. பல கரிமப் பொருள்களை வாலை வடிப்பதன் மூலமும் பெறப்படுகிறது.

Martensitic alloy steels: (உலோ.) மார்ட்டன்சிட்டிக் உலோகக் கலவை எஃகு: முழுமையாக மார்ட்டன்சைட் கொண்ட ஒரு வகை எஃகு. மார்ட்டன்சைட் என்பது, கார்பனும், ஆல்ஃபாவும் (இரும்புப் படிகங்கள்) அணுவியக்கச் சிதறல் மூலம் உண்டாவது. இந்த வகை எஃகு, மிகக் கடினமானது; ஆயினும், பதப்படுத்திய அல்லது மென்மையான எஃகினைப் போன்று அத்துணை கடினமானதன்று. ஆஸ்டினைட்டை 300°C-வெப்ப நிலையில், மெல்ல மெல்லக் குளிர வைப்பதன் மூலம் இது படிகிறது. புகழ்பெற்ற ஜெர்மன் உலோகவியலறிஞர் பேராசிரியர் ஏ. மார்ட்டன்ஸ் என்பாரின் பெயரில் இது அழைக்கப்படுகிறது.

Mash seam welding. (பற்ற.) மசிவு மடிப்புப் பற்றவைப்பு: இது ஒரு வகை மடிப்புப் பற்றவைப்பு முறை. இதில் விளிம்புகள் ஒன்றன் மேல் ஒன்று வைத்து நன்கு மசிக்கப்படுவதன் மூலம் பற்ற வைக்கப்படுகிறது.

Mask: முகமூடி: முகத்தை மூடிக் கொள்வதற்கு விசித்திரமான வடிவங்களில் செய்யப்பட்ட பொம்மைத் தலைகள்.

Masonite: மாசோனைட்: மர இழையிலான மின்காப்பு அட்டையின் வாணிகப் பெயர். இது பல்வேறு வகையான மேற்பரப்பு மாதிரிகளில் தயாரிக்கப்படுகிறது. இது பொட்டிப்புகள் அமைப்பதற்குப் பயன்படுகிறது.

Masonry: கட்டுமான வேலை: கல், செங்கல் போன்றவற்றால் கட்டிடங்கள் கட்டும் வேலை.

Mass: பொருண்மை: இயற்பியலில், ஒரு திரளில் செறிந்தடங்கியுள்ள பொருளின் அளவு.

அச்சுக் கலையில் ஒரு பக்க அச்செழுத்துச் செறிவுப் பகுதிகள்.

Mass production: பேரளவு உற்பத்தி: எந்திரக் கருவிகளைப் பயன்படுத்தித் திட்டமிடப்பட்ட பெரிய அளவில் பொருட்களை உற்பத்தி செய்தல்.