பக்கம்:அறிவியல் கலைச்சொல் களஞ்சியம்-இறுதிப்பகுதி.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Met

424

Mezrule

(2) அளவுமாணி: திரவங்கள், வாயுக்கள், மின்னோட்டம் முதலியவற்றை அளவிடுவதற்கான அளவு கருவி.

Metering orifice: (தானி. ) அளவித்துளை: பல் வேறு தேவைகளுக் கேற்ப எரிபொருள் செல்வதை முறைப்படுத்துவதற்காக உள்ள ஒரு நிலையான துளை.

Metering pin : (தானி.) அளவிப் பிணைப்பூசி: அளவித் துளையின் மீது அமைந்துள்ள ஒரு பிணைப் பூசி. இது அளவித் துறையின் வழியாக வாயு பாய்வதை முறைப் படுத்துகிறது.

Metering rcd : (தானி .) அளவித் தண்டு: எரிபொருள் பாய்வதை முறைப் படுத்தும் தடுக்கிதழ் புயத்துடன் இணைக்கப் பட்டுள்ள தண்டு.

Methane : (வேதி .) மீத்தேன் : மணமற்ற வாயு (CH4). தாவரப் பொருளின் இருமடிச் சேர்மானம் காரணமாக அல்லது கரிமப் பொரு எளின் உலர் வாலை வடித்தல் மூலமாக உண்டாகும் வாயு. ஒளிரும் வாயுவின் முக்கியமான கூறு.

Methanot : (வேதி.) மெத்தனால் (CH3OH): மெத்தில் ஆல்கஹால், மர ஆல்கஹால், மர ச்சாராவி போன்ற பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகிறது. எரிபொருளா கவும், வண்ணங்கள், மெருகெண் ணெய்கள் ஆகியவற்றின் கரைப் பானாகவும், ஆல்கஹாலை இயல்பு திரிப்பதற்காகவும் பயன் படுத்தப்படுகிறது.

Methyl (வேதி. ) மெத்தில்:(CH3 மீத்தேனிலுள்ள ஒரு ஹைடிரஜன் அணு இடம் பெயர்வதால் ஏற்படும் மூலக்கூறு. இது பல்வேறு கூட்டுப் பொருள்களில் ஓர் அங்கமாக உள்ளது.

Methyl acetone : (வேதி.) மெத்தில் அசிட்டோன்: மெத்தில் அசிட்டேட்டும், அசிட்டோனும் கலந்த ஒரு கலவை. ரப்பரின் கரைப்பானாகப் பயன்படுகிறது.

Metric gear ; (பட்.) மெட்ரிக் பல்லிணை : மெட்ரிக் அளவு முறைக்கிணங்க வடிவமைக்கப்பட்ட பல்லிணை.

Metric plug : (தானி .) மெட்ரிக் செருகி: மெட்ரிக் தர அளவுகளுக் கேற்ப திருகிழைகளைக் கொண்ட ஒரு கடர்ப் பொறிச் செருகி.

Metric system : (பொறி.) மெட்ரிக் முறை : பத்தின் மடங்குகளின் அடிப்படையில் அமைந்த நிறுத்தல், நீட்டல், முகத்தல் அளவை கள். முதலில் இது ஃபிரான்சில் பயன்படுத்தப்பட்டது. இன்று உலகெங்கும் அறிவியல் பணிகள் அனைத்திலும் பயன்படுத்தப்படு கிறது.

Metric threads : மெட்ரிக் திருகிழைகள: மெட்ரிக் அளவுகளுக் கிணங்க விகிதமுறையில் அமைந்த திருகிழைகள்.

Mezzanine : (க.க..) : இடை மாடி:இரண்டு உயர்மாடிக் கட்டிடங் களில் நிலத்தளத் தளத்திற்கும்