பக்கம்:அறிவியல் கலைச்சொல் களஞ்சியம்-இறுதிப்பகுதி.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Nat

439

Nea


Naphthalene : (வேதி.) இரச கற்பூரம் : C 1௦ Hg : கரி எண்ணெயில் (கீல்) கலந்திருக்கும் ஒரு கூட்டுப் பொருள். இது கரி எண்ணெயிலி ருந்து வெண்படிகச் சிம்புகளாகப் பிரித்தெடுக்கப்படுகிறது. சாயப்ப பொருட்சள் தயாரிப்பதாலும், நோய் நுண்ம ஒழிப்புப் பொருளாகவும், அந்துப்பூச்சி அழிப்பானாகவும் பயன்படுகிறது.

National electrical code : (மின்.) தேசிய மின் விதித்தொகுப்பு : மின் கடத்திகள், மின் சாதனங்கள், மின் எந்திரங்கள் போன்றவற்றை நிறுவும்போது மின்னியல் வல்லுநர்களுக்கு வழி காட்டியகவுள்ள விதிகளின் தொகுப்பு.

Nstive copper : (கனிம.) தன்னியல்புத் தாமிரம் : மிக உயர்ந்த தரமான செம்பு. இது உலோக வடிவிலேயே தோண்டியெடுக்கப்பபடுகிறது. மின்னியல் நோக்கங்களுக்குப் பெரிதும் பயன்படுகிறது.

Natural : (அச்சு.) இயற்கை வண்ணம் : சிறிதளவு செயற்கை வண்ணம் சேர்க்கப்பட்ட மரக் கூழின் இயற்கை வண்ணத்திலிருந்து கிடைக்கும் காகிதத்தின் வண்ணம்.

Natural cement : (பொறி.) இயற்கை சிமெண்ட் : சீமைச் சிமெண்ட் (போர்ட்லண்ட் சிமெண்ட்) எனப்படும் சீமைக்காரையிலிருந்து வேறுபட்டது. இது விரைவாக இறுகிக் கொள்ளும்; விலை மலிவானது; வெளிர் நிறமுடையது. வலிமை குன்றியது.

Natural gas : (வேதி.) இயற்கை வாயு : நிலத்திலிருந்து இயற்கையாக வெளிப்படும் வாயு. இது எண்ணெய்ப் படுகை மண்டலங்களில் ஏராளமாகக் கிடைக்கிறது. மிகுந்த வெப்பத்திறன் கொண்டது. மிகச் சிறந்த எரிபொருள்.

Natural resins : (வேதி.குழைம.) இயற்கைப் பிசின் : தாவரங்களிலிருந்து சுரக்கும் திடப்பொருள்; எளிதில் உடையக்கூடியது; கண்ணாடிபோல் பளபளப்புடையது. கிளிஞ்சலின் தன்மையுடையது; தண்ணிரில் கரையாதது; பல்வேறு உருகுந்திறன் கொண்டது.

Nautical measure : கடல் அளவை 6080, 20 அடி = 1 கடல் மைல் அல்லது அலகு: 8 கடல் மைல் = 1 லீக் 60 கடல் மைல் = 1 பாகை (பூமத்திய ரேகையில்)

N.B. (அச்சு.) பி.கு. பின் குறிப்பு என்பதன் சுருக்கம் பின் வருவதை நன்கு கவனி என்பது பொருள்.

Neat cement : (க.க.) தூய சிமெண்ட் : மணல் கலக்காத தூய்மையான சிமெண்ட் காரை.

Neat’s-foot oil : மாட்டு காலடி எண்ணெய் : எருது வகையைச் சேர்ந்த தூய்மையான கால்நடைகளின் காலடி மற்றும முழந்தாள் எலும்புகளை நீரில் கொதிக்கவைப்பதன் மூலம் கிடைக்கும் ஒருவகை எண்ணெய். இது வெளிர் மஞ்சள் நிறமுடையது. இது தோலை மென்மைப்படுத்துவதற்கு முக்கியமாகப் பயன்படுகிறது.