பக்கம்:அறிவியல் கலைச்சொல் களஞ்சியம்-இறுதிப்பகுதி.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Pai

460

Pan


Paint base : (வேதி.) வண்ண ஆதாரம் : ஈயம் அல்லது துத்த நாகம் போன்று, வண்ணத்தின் ஆதாரப் பொருள் .

Paint drier :வண்ண உலர்த்தி : வண்ணம் பூசியதும் அந்த வண்ணத்தை விரைவாக உலரும்படி செய்வதற்குப் பயன்படும் பொருள். பெரும்பாலான வண்ண உலர்த்திகள் ஈயத்தினாலும், மாங்கனீசினாலும் ஆனவை. இந்தப் பொருளை அளவோடு பயன்படுத்துவது நலம். அளவுக்கு மீறிப் பயன்படுத்துவது கெடுதல்.

Paint for concrete :கான்கிரீிட் வண்ணம் : துத்தநாக ஆக்சைடை அல்லது பேரியம் சல்பேட்டை எண்ணெயுடன் கலந்து தயாரிக்கப்படும் வண்ணப் பொருள்.

Painting! வண்ணம் பூசுதல் : வண்ணம் பூசி அலங்கார வேலைப் பாடுகள் செய்தல்.

Paint thinner . வண்ண நெகிழ்ப்பான் : திண்ணிய வண்ணப் பொருள்களை எளிதாகப் பயன்டுத்துவதற்கு வசதியாக நெகிழ்வுறுத்துவதற்காகக் கற்பூரத் தைல அல்லது பெட்ரோலியச் சாராவிகள் பயன்படுத்தப்படுகின்றன. மலிவாகக் கிடைப்பதால் பெட்ரோலியச் சாராவிகளே பெரிதும் பயன்படுத்தப்படுகின்றன.

Packtong :பேக்டாங் : நிக்கல், துத்தநாகம், செம்பு கலந்த ஒர் உலோகம். ஜெர்மன் வெள்

ளியை ஒத்தது உலோக வேலைப்பாடுகளுக்குப் பயன்படுகிறது.

Palladium: (வேதி.) பல்லேடியம் ! வெண்ணிறமான, கம்பியாக இழுக்கக்கூடிய, தகடாக்கக்கூடிய ஒர் அரிய உலோகம். இது பிளாட்டினத்துடன் கிடைக்கிறது.

Pamphlet (அச்சு.) துண்டு வெளியீடு : அட்டைகளின்றி அல்லது கட்டுமானம் செய்யப்படாமல் காகிதத்தில் அச்சிடப்பட்ட ஒரு சிறு புத்தகம்.

Pan: தாலம்: (1) ஓர் ஒளிப்படக் கருவின் இயக்கம், இது ஒரு தொகுதியின் அடுக்கணிக்காட்சியைக் காட்டக்கூடியது.

(2) ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட விளக்குகள் பயன்படுத்தப்படும் ஒரு பிரதிபலிப்பு அலகு. இதில் பெரும்பாலும் நுண் ஊதாக் கதிரால் ஒளிரும் விளக்குகள் பயன்படுத்தப்படுகின்றன.

Panchromatic: (ஒ.க.) நிறப்பதிவுப் பசை: ஒளியின் நிறங்கள் அனைத்தையும் பதிவு செய்யக்கூடிய பசைக் குழம்புகள்.

Panel board (மின்.) மின் விசைப் பலகை: மின் விசைகளும், உருகு கம்பிகளும் உடைய ஒரு கட்டுப்பாட்டுப் பலகை.

Pantograph: படப்படியெடுப்பான்; வரைபடங்களை பெரிதாக்கிய அளவிலோ, சுருங்கிய அளவிலோ படி